தமிழ் சினிமா உலகில் தன்னுடைய உருவத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் குண்டு கல்யாணம். இவர் 1967ஆம் ஆண்டு தான் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். பின் 1979ஆம் ஆண்டு மழலை பட்டாளம் என்ற படத்தின் மூலம் நடிகராக தன்னுடைய கேரியரை தொடங்கினார். இவருடைய நடிப்பு மற்றும் உடல் தோற்றம் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது. பின் இவர் சூப்பர் ஸ்டார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்துள்ளார். இவர் இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சினிமாவை தாண்டி இவர் ஒரு தீவிர அதிமுக தொண்டர். மேலும், தன்னுடைய பேச்சு திறமையின் மூலம் அதிமுக கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டியவர். சமீபத்தில் இவர் தீவிர சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே. சிறுநீரக சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் இவர் தன்னுடன் நடித்த பிற நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலரிடம் உதவி கேட்டு இருந்தார். ஆனால், உதவி கிடைக்காமையால் இவர் தன்னுடைய ஆபரேஷனை தள்ளி வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது.

Advertisement

500 ருபாய் சம்பளம் :

அதில் அவர் தன் வாழ்க்கையில் நடந்த மிக சோகமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, நான் சினிமாவில் நடித்ததால் பேர், புகழ் கிடைத்தது. ஆனால், சொத்து தான் வாங்க முடியல. ஏன்னா, அப்ப எல்லாம் ஒரு படத்துக்கு 500 ரூபாய் ,1000 தான் சம்பளம். இப்ப தர மாதிரி எல்லாம் அப்ப கிடையாது. நான் பணம் சம்பாதிக்கவில்லை என்றாலும் மக்களுடைய இதயங்களை சம்பாதித்தேன். நான் சினிமா, நாடகம் என்று இரண்டில் மட்டும் தான் என்னுடைய கவனம் இருந்தது. இதைத் தாண்டினால் நான் வேறு எந்த ஒரு தொழிலையும் செய்யவில்லை.

அதரவு அளிக்காத அரசியல் ;

ஒரு முறை என் பொண்ணு கல்யாணத்துக்காக வைத்திருந்த நகைகளை திருடிட்டு போய்ட்டாங்க. அப்ப நான் சட்டமன்றத்தில் ஒரு பதவி வகித்து இருந்தேன். இது குறித்து சட்டமன்றத்தில் நான் பல பேரிடம் கேட்டேன். இன்னும் வரை எனக்கு அதற்கான ஒரு தீர்வை கொடுக்க வில்லை. எனக்கு அதுதான் மன வருத்தத்தை கொடுத்தது. நான் சட்ட மந்திரியாக இருந்து என்ன பிரயோஜனம். நான் சினிமா துறையில் இருந்து விலகியது நினைத்து இப்ப ரொம்ப ஃபீல் பண்ணுகிறேன். 1998ல் நாடாளுமன்றத் தேர்தல் நடந்த போது என்னை வேறு எந்த வேலையாக இருந்தாலும் ஒதுக்கிவிட்டு தேர்தலுக்கான பணிகளை பார்த்துக்கொள் என்று சொன்னார்கள்.

Advertisement

உதவி இருக்கும் ops :

அப்போது தான் நான் சினிமா வாழ்க்கையில் இருந்து விலகினேன். நான் தேர்தலுக்காக உழைத்தேன். ஆனால், எனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. நான் உடம்பு சரியில்லாமல் இருந்தபோது யாருமே எனக்கு உதவ வில்லை. ஓபிஎஸ் ஐயா மட்டும் தான் எனக்கு உதவி செய்தார். அதை நான் என்னைக்கும் மறக்க மாட்டேன். அரசியலால் எனக்கு சினிமா போனது, என்னுடைய கிட்னி போனது, என்னுடைய வாழ்க்கையே போனது. நான் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு இருக்கும் போது என் மகள் ரொம்ப கஷ்டப்பட்டார். என் மகள் என் கட்சியிடம் உதவி கேட்டபோது இங்கே போ, அங்கே போ என்று அழைய வைத்தார்கள்.

Advertisement

உடம்பு சரி செய்ய வாய்ப்பு கொடுங்க :

ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்கள் நீங்க எனக்கு பண உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை என்னை மாதிரி நலிந்த நடிகர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் அதை வைத்து உடம்பு சரி செய்வதற்காகத் தான் கேட்கிறோம். மீண்டும் எனக்கு சினிமாவில் நடிக்க ஆசையாக இருக்கிறது. இப்போது இருக்கும் இளம் இயக்குனர்கள் எனக்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று இந்த சமயத்தில் நான் கையெடுத்துக் கும்பிட்டு கேட்கிறேன். உடம்பு சரி பண்ணிட்டு வந்து எல்லோரிடம் வாய்ப்பை கேட்டு கண்டிப்பாக சினிமாவில் நுழைவேன் என்று கூறியிருந்தார்.

Advertisement