சனங்களின் கலைஞனாக இருந்த சின்னக் கலைவானர விவேக் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி காலமான சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விவேக்கின் இறப்பிற்கு பலர் இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில் விவேக்குடன் ஒரு படங்களின் கூட நடிக்காத நடிகர் கமல் ஹாசன், விவேக் மரணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து இருந்தார். அதில், நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என்று இருந்துவிடாமல் தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று பதிவிட்டு இருந்தார்.

இந்தியன் 2 விவேக் :

விவேக் இத்தனை ஆண்டுகளில் ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என்று பல்வேறு முன்னணி படங்களில் நடித்துவிட்டாலும் கமலுடன் நடிக்காதது ஒரு குறையாகவே இருந்தது. கமல் நடித்த ‘தெனாலி’ படத்தில் கூட நடிகர் விவேக் நடிப்பதாக இருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் நடிகர் விவேக்கால் நடிக்க முடியாமல் போனது. இப்படி ஒரு நிலையில் தான் கமலின் ‘இந்தியன் 2’ படத்தில் விவேக்கிற்கு வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

விவேக்கு பதில் யார் :

முதன் முறையாக கமலுடன் நடிக்கிறோம் என்று மிகந்த மகிழ்ச்சியில் இருந்த விவேக்கிற்கு அந்த ஆசை நிறைவேறுதற்குள் காலம் முடிந்துவிட்டது. இப்படி ஒரு நிலையில் நடிகர் விவேக்கின் இறப்பால் இந்தியன் 2வில் அவரின் காட்சியை எப்படி மாற்றப் போகிறார்கள், இல்லை விவேக்கின் காட்சிகளை நீக்கிவிடுவார்களா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சில நாட்கள் படமாக்கப்பட்ட விவேக்கின் காட்சிகள் அவர் இல்லாததால் அடுத்த கட்டத்தை எப்படி எடுக்கலாம் என்று சிந்தித்துவந்தார்களாம்.

விவேக் வெளியூருக்கு சென்று விட்டார் என்பது போல அவரது காட்சியை முடித்து விடலாமா, அல்லது வேறொரு நபரை வைத்து விவேக் சம்பந்தப்பட்ட காட்சிகளை மீண்டும் படமாக்கலாமா என்று படக்குழுவினர் ஆலோசித்து வந்ததாம் இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் விவேக்கின் கதாபத்திரத்திற்கு பதிலாக குரு சோமசுந்தரம் கமிட் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. குரு சோம சுந்தரம் வேறு யாரும் இல்லை தமிழில் பல படங்களில் நடித்தவர் தான்.

Advertisement

யார் இந்த குரு சோமசுந்தரம் :

ராஜமுருகன் என்ற இயக்குனரின் அற்புத படைப்பான ஜோக்கர் திரைப்படம் 2016 இல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த காலத்தில் உள்ள அரசியல் வாதிகளையும்,ஊழல் அதிகாரிகளையும் தைரியமாக எதிர்க்கும் ஒரு பாடமாக அமைந்தது. இந்த படத்தில் ஹீரோவாக ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தவர் குரு சோம சுந்தரம். இந்த படத்திற்காக இவர் பல விருதுகளையும் பெற்றார்.

Advertisement

ஜோக்கர் முதல் மின்னல் முரளி வரை :

ஜோக்கர் படத்திற்க்கு முன்பாகவே இவர் தமிழில் ஆரண்ய காண்டம், கடல், பாண்டிய நாடு, ஜிகிர்தண்டா போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். இறுதியாக சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் நடித்து இருந்தார். சமீபத்தில் மலையாளத்தில் வெளியான ‘மின்னல் முரளி’ படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார் குரு சோம சுந்தரம்

Advertisement