தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீப காலமாகவே இவர் வித்யாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான “ராட்சசன்” திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் அவர்கள் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு ஆண்டு இவர்கள் இருவருக்கும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் நடிகை அமாலபாலை திருமணம் செய்ய இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வெளியாகின. ஆனால், அது எல்லாம் உண்மை இல்லை, வதந்தி என்று மறுத்தார் நடிகர் விஷ்ணு விஷால். மேலும், விஷ்ணு விஷால் அடிக்கடி பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா என்பவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இதையும் பாருங்க : உடல் எடையை குறைத்து விட்டதாக நடிகை முமைத் கான் பதிவிட்ட புகைப்படம்.
இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவர்கள் இருவரும் காதலிப்பதாக பேசப்பட்டு வருகிறது. மேலும், இது குறித்து விஷ்ணு விஷால் இடம் பேட்டி எடுத்த போது அவர் கூறியது, நானும் ஜுவாலாவும் நல்ல நண்பர்கள். எங்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பதால் அவ்வப்போது சந்தித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டு. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகத் தான் பழகி வருகிறோம். எனக்கு கல்யாணம் என்ற வார்த்தையை கேட்டாலே இப்போது ரொம்ப பயமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் சிக்ஸ் பேக் வைத்து தனது உடலை மெருகேற்றிய புகைப்படங்களை வெளியிட்டார்.
https://twitter.com/sathish1686/status/1217779835059068928
சமீபத்தில் எஃப்ஐஆர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது அதில் சிக்ஸ்பேக் வைத்து கட்டுமஸ்தான உடல் இருந்த விஷ்ணு விஷாலை கண்டு பலரும் வியந்து போனார்கள். அதே போல சமீபத்தில் விஷால் தனது வாழ்வில் பட்ட கஷ்டங்களையும் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வந்தேன் என்பதையும் ஒரு உருக்கமான பதிவை பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர் ஒருவர், ஜுவாலா விற்காக தானே நீங்கள் இப்படி சிக்ஸ் பேக் வைத்துள்ளீர்கள்.
https://twitter.com/Guttajwala/status/1217780993999785984
அவர் தான் உங்கள் எடையை குறைக்க சொன்னதாகவும் அப்போது தான் நாம் இருவரும் சிறந்த ஜோடியாக தெரிவோம் என்று சொன்னதாகவும் கேள்வி பட்டேன். அப்படி தானே என்று கூறியிருந்தார். அதற்கு விஷ்ணு விஷால் எந்த பதிலையும் சொல்லாத போதிலும், இதற்கு பதில் அளித்த ஜுவாலா, இல்லை, அது உண்மை கிடையாது. அவருக்காக தான் அவர் செய்தார் என்று கூறியுள்ளார்.





