ஜி.வி. பிரகாஷ் மகளின் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே ஜிவி பிரகாஷ்-சைந்தவி பிரிய இருப்பதாக அறிவித்த செய்தி தான் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோலிவுட்டில் மிக பிரபலமான இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் சாதித்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜிவி பிரகாஷ் அவர்கள் முதன்முதலாக ‘வெயில்’ என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அந்தப் படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். குறிப்பாக இந்த 2024 ஆம் ஆண்டு இவருக்கு நல்ல ஆண்டாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
ஜி.வி பிரகாஷ்- சைந்தவி திருமணம்:
கடந்த ஆண்டு இவர் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் ஹிட் தான். இதற்கிடையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார்கள். திருமணம் ஆண்டு 7 ஆண்டுகள் கழித்து கடந்த 2020 ஆம் ஆண்டு இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. சைந்தவியும் பிரபலமான பாடகி ஆவார். இப்படி ஒரு நிலையில் திருமணமாகி 12 ஆண்டுகள் கழித்து தாங்கள் இருவரும் பிரிவதாக இருவரும் அறிவித்து இருந்தார்கள்.

ஜி.வி பிரகாஷ் - சைந்தவி பிரிவு :
இது பலருக்கும் இருவரும் அதிர்ச்சி தான். இவர்கள் எதற்காக பிரிந்தார்கள் என்று தற்போது வரை தெரியவில்லை. ஆனால், இது குறித்து பல வதந்திகள் இணையத்தில் வைரலாகி வந்தது. இணையவாசிகள் இது குறித்து கேள்வியும் எழுப்பி இருந்தார்கள். மேலும், பிரிவுக்கு பின் இவர்கள் இருவரும் தங்களது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள். விவாகரத்திற்கு பிறகு, சமீபத்தில் மலேசியாவில் நடந்த ஜிவி பிரகாஷின் இசை நிகழ்ச்சியில் கூட சைந்தவி பாடியிருந்தார். அதேபோல், ஜிவி பிரகாஷ் இசையமைத்த படங்களிலும் சைந்தவி பாடல்களை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.வி. பிரகாஷ் படங்கள்:
இப்படி விவாகரத்துக்கு பிறகும் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஒன்றாக பணியாற்றுவது அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது. தற்போது ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கிங்ஸ்டன். இந்த படத்தை இவரே தான் தயாரித்திருக்கிறார். இந்த படத்தை கமல் பிரகாஷ் இயக்கி இருக்கிறார். இது ஜி.வியின் 50வது படம் ஆகும். இது மட்டும் இல்லாமல் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் மெண்டல் மனதில் என்ற படத்தையும் ஜீவி பிரகாஷ் தான் தயாரித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களுமே இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் கிங்ஸ்டன் படத்தினுடைய டீசர் வெளியாகி இருந்தது.
https://www.youtube.com/watch?v=_lXjpFQIGPg
ஜி.வி.பிரகாஷ் மகள்:
இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில், மதயானை கூட்டம் படத்தில் என்னுடைய பெயரில் தான் பேனர் இருந்தது. ஆனால், அந்த படத்துக்கு நான் தயாரிப்பாளர் கிடையாது. இப்போ தயாரிப்பாளராக என்னுடைய பெயர் கிங்ஸ்டன், மெண்டல் மனதில் படங்களில் வரப்போகிறது. நான் இந்த விஷயத்தை பணம் சம்பாதிக்கணும் என்ற நோக்கத்தில் செய்யவில்லை. நான் நிறைய ஆர்வத்தோடு தான் இந்த படங்களை தயாரித்திருக்கிறேன் என்று தன்னுடைய சினிமா அனுபவங்களை குறித்து பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது ஜிவி பிரகாஷ் மகள் அன்வி, மாடி மேலிருந்து, அப்பா நீ எங்க இருக்க? என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஜிவியும், இங்கதான் இருக்கேன் என்று சொன்னார். பின் அன்வி, ஒடி வந்து ஜி.வி பிரகாஷை கட்டியணைத்துக் கொண்டார் தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.






