பட போஸ்டரில் வெளியான ஜிவி பிரகாஷின் படத்தை பார்த்துவிட்டு, ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்த முருகதாஸ். ஆனால், நடக்கல.

0
484
gv
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் கலக்கி கொண்டு இருக்கிறார் நடிகர் ஜீ.வி. பிரகாஷ். தற்போது உள்ள பிரபலமான நடிகர்களின் முன்னணி நடிகராக ஜி.வி. பிரகாஷ் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் இசைத்துறையில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஆவார். இவர் சினிமா துறையில் முதன் முதலாக வெயில் படத்தில் தான் இசை அமைத்து அறிமுகமானார். இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து நிறைய படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

AL விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த தாண்டவம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைத்து இருந்தார். மேலும், இந்த படத்தின் போஸ்டர் வெளி வந்திருந்த போது ஜிவி பிரகாஷ் படமும் அதில் இருந்தது. இதனை பார்த்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் அவர்கள் ஜிவி பிரகாஷ் வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று தீர்மானம் செய்தார். பின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் அவர்கள் ஜிவி பிரகாஷ் வைத்து இசை படம் எடுக்க முடிவு செய்தார்.

- Advertisement -

அந்த இசை படத்தில் ஜிவி பிரகாஷ், நஸ்ரியா நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்தப் படம் நின்றுவிட்டது. அதற்கு பின்னர் தான் ஜிவி பிரகாஷ் வைத்து டார்லிங் என்ற பெயரில் இசை படம் வெளிவந்தது. சாம் ஆண்டன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் டார்லிங். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், நிக்கி கல்ராணி, பாலா சரவணன் உள்ளிட்ட உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

இந்த படம் வணிக ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இறுதியாக ஜி வி பிரகாஷ் வணக்கம்படா மாப்ளே படத்தின் நடித்து இருந்தார் இதனைத் தொடர்ந்து இவர் அடங்காதே, ஐங்கரன், டிராப் சிட்டி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர்அடங்காதே , வாடிவாசல் போன்ற பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இந்த வருடம் ஜிவி பிரகாஷ் நடிப்பில் நிறைய படங்கள் வெளிவர உள்ளது.

-விளம்பரம்-
Advertisement