அம்மாவின் ஆப்ரேஷன் செலவை சொல்லி, படிப்பிற்கு உதவி கேட்ட அஜித் ரசிகர் – ஜி வி பிரகாஷ் செய்த உதவி.

0
396
gvprakash
- Advertisement -

கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டிய பணத்தை வைத்து அம்மாவின் அறுவை சிகிச்சையை முடித்ததால் தேர்வு கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த அஜித் ரசிகர்கருக்கு ஜி வி பிரகாஷ் உதவி செய்து இருக்கிறார். கோலிவுட்டில் மிக பிரபலமான இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் சாதித்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து தமிழுக்கு பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இசையமைத்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது.

-விளம்பரம்-

சூர்யா நடிப்பில் வெளிவந்திருந்த சூரரை போற்று படத்திற்கு இசையமைத்ததற்காக ஜிவி பிரகாசுக்கு தேசிய விருதும் கிடைத்திருந்தது.இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் சமூகம் சார்ந்த விஷயங்களில் தனக்கு தோன்றிய கருத்துக்களை வெளிப்படையாக பேசுவது இவருடைய வழக்கம். அது மட்டும் இல்லாமல் பலருக்கு உதவிகளையும் செய்து வருகிறார்.

- Advertisement -

உதவி கேட்ட அஜித் ரசிகர் :

இப்படி ஒரு நிலையில் கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டிய பணத்தை வைத்து அம்மாவின் அறுவை சிகிச்சையை முடித்ததால் தேர்வு கட்டணம் செலுத்த முடியாமல் தவித்த அஜித் ரசிகர்கருக்கு ஜி வி பிரகாஷ் உதவி செய்து இருக்கிறார். சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் smart ajith என்ற ட்விட்டர் கணக்கில் அஜித்தின் Dpயை வைத்து இருந்த பயனர் ஒருவர் ‘ஜி வி பிரகாஷ் அண்ணா நான் கோயம்புத்தூரில் College படிச்சிட்டு இருக்கேன்.பக்கத்துல இருக்க Hotel-ல வேலை செஞ்சுதான் என்னோட College Fees மற்ற செலவுகளையும் பார்த்துட்டு இருந்தேன்.

அம்மாவின் ஆப்ரேஷன் செலவு :

ஆனா 2 மாசத்துக்கு முன்னாடி எங்க அம்மாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லாம போய் வயித்துல ஆபரேஷன் பண்ணாங்க அண்ணா. ஆபரேஷனுக்கு நான் வைத்திருந்த மொத்த பணத்தையும் போட்டு அது மட்டும் இல்லாம கொஞ்சம் பணம் பத்தாம கடன் வாங்கி ஆபரேஷன் செலவை பார்த்துட்டோம்.ஆனா இப்ப Semester வர்றதால College Fee கட்ட முடியல.Fee கட்டாமல் போனா Exam எழுத விடமாட்டார்கள்.உங்களால் முடிந்தால் ஏதாவது உதவி செய்யுங்க அண்ணா’ என்று பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

உதவி செய்த ஜிவி பிரகாஷ் :

இந்த பதிவை பார்த்த ஜி வி பிரகாஷ் ‘அந்த நபரின் gpay கணக்கை கேட்டு அவருக்கு பணத்தை அனுப்பி இருக்கிறார்’. ஜி வி பிரகாஷின் உதவியை பெற்ற அந்த அஜித் ரசிகர் ‘அண்ணா என் உயிர் உள்ளவரை இந்த உதவியை மறக்க மாட்டேன் அம்மாவும் உங்களுக்கு நன்றி சொல்ல சொன்னாங்க அண்ணா’ என்று கண்ணீருடன் நன்றி தெரிவித்து இருந்தார். அதற்கு ஜி வி பிரகாஷ் அந்த மாணவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

ஏற்கனவே மாணவிக்கு உதவிய GV :

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட ட்விட்டரில் கல்லூரி மாணவி ஒருவர் டீவ்ட் ஒன்று போட்டு இருந்தார். நான் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ படிக்கிறேன். இந்த மாதம் என்னுடைய கல்வி தேர்வுகள் தொடங்கியிருக்கிறது. இதில் என்னுடைய தேர்வு கட்டண விவரத்தை இணைத்து இருக்கிறேன். உங்களது உதவி எனக்கு தேவை என்று கேட்டிருந்தார். இப்படி மாணவி பதிவிட்ட பதிவுக்கு ஜிவி பிரகாஷ், உங்களுடைய google pay கணக்கிற்க்கு பணம் அனுப்பப்பட்டு விட்டது என்று பதில் அளித்து இருந்தார்.

கல்லூரி மாணவி கேட்ட உதவிக்கு உடனே ஜிவி பிரகாஷ் செய்திருக்கும் செயல் பாராட்டுகளை குவித்து வந்தனர். அதே சமயம் அது Fake ஐடி என்றும் யாரும் நாளை தேர்வு வைத்துகொண்டு இன்று கட்டணம் கட்ட மாட்டார்கள், அணைத்து கல்லூரியும் விடுமுறையில் இருக்கும் போது எந்த கல்லூரியில் விடுமுறையில் தேர்வு வைக்க மாட்டார்கள் என்றும் கூறி வந்தனர். இருப்பினும் மீண்டும் உதவி கேட்ட மாணவனுக்கு ஜி வி பிரகாஷ் உதவி செய்து இருப்பது பலரும் பாராட்டை பெற்று இருக்கிறது.

Advertisement