குழந்தைக்கு அப்பாவானார் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ். குவியும் வாழ்த்துக்கள்.

0
8960
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் கலக்கி கொண்டு இருக்கிறார் நடிகர் ஜீ.வி. பிரகாஷ். தற்போது உள்ள பிரபலமான நடிகர்களின் முன்னணி நடிகராக ஜி.வி. பிரகாஷ் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் இசைத்துறையில் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஆவார். இவர் சினிமா துறையில் முதன் முதலாக வெயில் படத்தில் தான் இசை அமைத்து அறிமுகமானார். இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார். இந்த படத்தை தொடர்ந்து நிறைய படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-
Music maestro AR Rahman during the wedding reception of GV Prakash ...

இவர் ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஒரு பாடகனாக அறிமுகமானார். அதன் பின்னர் படங்களில் ஹீரோவாக நடிக்கவும் தொடங்கினார். இவருடைய பென்சில், டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த ஆண்டு ஜீ.வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த சிவப்பு மஞ்சள் பச்சை படம் அதிக வசூலை அளித்தது.

இதையும் பாருங்க : மருத்துவமனைக்கு தாமதம். நடு ரோட்டில் ஏழை கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பிரபலம். இவர் யார் தெரியுமா ?

- Advertisement -

ஜி பிரகாஷ், பின்னணி பாடகியான சைந்தவிவை திருமணம் செய்து கொண்டார். பின்னணி பாடகியான சைந்தவி 5 வயது முதலே சங்கீதத்தை கற்று தேர்ந்தவர். மேலும், இவரை பட்டியல் படத்தின் மூலம் சினிமா பாடகியாக அறிமுகம் செய்து வைத்தவர் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா தான். அதன் பின்னர் பல்வேறு பாடல்களை பாடிய சைந்தவி மதராசபட்டினம் படத்தில் ஜிவி பிரகாஷின் இசையில் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gv Prakash Kumar Invites Ajith And Shalini For His, Download ...

மேலும், ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியும் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் தான். மேலும் இவர்கள் இருவரும் திருமணம் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது திருமணம் முடிந்து ஆறு ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சைந்தவி பெண் குழந்தைக்கு தாயாக ஆகியுள்ளார் இன்று (ஏப்ரல் 20) சைந்தவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதையும் பாருங்க : ‘மிகவும் வேதனை அளிக்கிறது’ என்னுடைய இந்த நிலத்தில் புதைத்து கொள்ளுங்கள்- விஜயகாந்த் அறிக்கை.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த 100% காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் அடங்காதே, ஐங்கரன், டிராப் சிட்டி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் சூரரைப்போற்று, வாடிவாசல் போன்ற பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இந்த வருடம் ஜிவி பிரகாஷ் நடிப்பில் நிறைய படங்கள் வெளிவர உள்ளது.

Advertisement