கோலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். இவர் இரு துறைகளில் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜிவி பிரகாஷ் அவர்கள் முதன்முதலாக ‘வெயில்’ என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அந்தப் படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். குறிப்பாக, கடந்த 2024 ஆம் ஆண்டு இவருக்கு நல்ல ஆண்டாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு இவர் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் ஹிட் தான்.
ஜி.வி.பிரகாஷ் குறித்த தகவல்:
கடந்த ஆண்டு ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் கிங்ஸ்டன். இந்த படத்தின் மூலம் தான் தயாரிப்பாளராகவும் ஜி வி பிரகாஷ் சினிமாவில் அடி எடுத்து வைத்திருக்கிறார். கடல் சார்ந்த கதைக்களத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டது. இது ஜி.வி பிரகாஷினுடைய 25 வது படம் ஆகும். கடைசியாக ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ஹாப்பி ராஜ். இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் உதவி இயக்குனராக பணிபுரிந்த மரியா இளஞ்செழியன் இயக்கி இருந்தார்.

ஜி வி பிரகாஷ் பேட்டி:
இந்த படத்தில் நடிகை கௌரி பிரியா, அப்பாஸ், ஜார்ஜ் மரியன் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து ஜிவி பிரகாஷ் அவர்கள் ஜோ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் இவர் கிரிக்கெட் வீரராக நடிப்பதாக கூறப்படுகிறது.

நடிக்க மறுத்த காரணம்:
இதை அடுத்து இன்னும் சில படங்களில் ஜிவி பிரகாஷ் கமிட் ஆகி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜிவி பிரகாஷ், நான் எந்த விளம்பரங்களுக்கும் ஆதரவு கொடுக்க மாட்டேன். சூதாட்டம், மதுபானம் தொடர்பான விளம்பரங்களுக்கு நான் ப்ரொமோஷன் செய்யவே மாட்டேன். குளிர்பானங்களுக்கான விளம்பரங்களில் கூட நடிக்க கோடிக்கணக்கில் கொடுக்க முன் வந்தார்கள். இருந்தாலும் நான் ஏற்றுக் கொள்ளவே இல்லை. எனக்கு அதில் உடன்பாடும் இல்லை. நான் நடிக்க முடியாது என்று மறுத்து விட்டேன் என்று கூறி இருக்கிறார்.






