விவாகரத்திற்கு பின் ஜிவி பிரகாஷ் - சைந்தவி இருவரும் இணைந்து பாடியிருக்கும் வீடியோக்கள் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே ஜிவி பிரகாஷ்-சைந்தவி பிரிய இருப்பதாக அறிவித்த செய்தி தான் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோலிவுட்டில் மிக பிரபலமான இசையமைப்பாளர், பாடகர், நடிகர் எனபல துறைகளில் சாதித்து வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் இரு ஆஸ்கார் விருதுகளை அள்ளி வந்து பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
GV + Saindhavi Combo❤️❤️
— Outis (@_outisk) December 8, 2024
Pirai Thedum
Unnale Ennalum
Aaruyire Aaruyire
When GV start “En Aayul Rekai Neeyadi” 🥹🥹 pic.twitter.com/pJGGDewrrI
மேலும், ஜிவி பிரகாஷ் அவர்கள் முதன் முதலாக 'வெயில்' என்ற படத்தில் இசை அமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். அதன் பின் ஹீரோவாக இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
ஜிவி பிரகாஷ்-சைந்தவி திருமணம்:
கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. தற்போது இவர் படங்களில் நடித்தும், இசை அமைத்தும், பாடியும் வருகிறார். இதற்கிடையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து இருந்தார்கள். திருமணம் ஆகி 7 ஆண்டுகள் கழித்து கடந்த 2020 ஆம் ஆண்டு இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது.
View this post on Instagram
ஜிவி பிரகாஷ் பிரிவு :
சைந்தவியும் பிரபலமான பாடகி ஆவார். இப்படி ஒரு நிலையில் திருமணமாகி 12 ஆண்டுகள் கழித்து தாங்கள் இருவரும் பிரிவதாக இருவரும் அறிவித்து இருந்தார்கள். இது பலருக்கும் பேர் அதிர்ச்சி தான். இவர்கள் எதற்காக பிரிந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இது குறித்து பல வதந்திகள் இணையத்தில் வைரலாகி வந்தது. இணையத்தில் இது குறித்து கேள்வியும் இணையவாசிகள் எழுப்பி இருந்தார்கள். மேலும், பிரிவுக்கு பின் இருவரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
ஜி.வி பிரகாஷ் இசை நிகழ்ச்சி:
இந்நிலையில் ஜி.வி பிரகாஷ் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி மலேசியாவில் இசை நிகழ்ச்சி நடத்தி இருந்தார். அதில் ரசிகர்கள் பலரும் ஆவலோடு கலந்து கொண்டனர். அதில் ஜிவி பிரகாஷின் முன்னாள் மனைவியும், பாடகியுமான சைந்தவியும் ஒன்றாக பாடி இருந்தார்கள். குறிப்பாக ஜிவி பிரகாஷ் பியானோ வாசிக்க, தனுஷ்- செல்வராகவன் குற்ற அணையில் உருவான 'மயக்கம் என்ன' படத்தில் வரும் 'பிறை தேடும் இரவிலே' என்ற பாடலை சைந்தவி பாடினார்.
View this post on Instagram
வைரலாகும் வீடியோக்கள்:
மேலும், சைந்தவி இந்தப் பாடலைப் பாடிய போது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து ஆரவாரம் செய்து கொண்டாடினர். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் தான் இணையத்தில் பயங்கர வைரல் ஆகி வருகிறது. மேலும், ஜிவி பிரகாஷ் அவர்களும் இசை நிகழ்ச்சியின் சில வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் குறிப்பாக, ஜீவியின் முன்னாள் மனைவி சைந்தவி மற்றும் மகள் அன்வி இடம்பெற்று இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோக்கள் ஜிவி மற்றும் சைந்தவியின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.





