Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.10.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 3 நிமிடம்

இன்னும் கொஞ்சம் விட்டா அது சிவன் கோவிலே இல்ல பெளத்த கோவில்னு சொல்லிடுவானுங்க - வெற்றிமாறனுக்கு எதிராக பாய்ந்து வரும் பாஜக

A
எழுதியவர்Arun3 அக்டோபர், 2022 அன்று 12:02 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவானதில் இருந்து ராஜராஜ சோழன் பற்றிய கருத்துக்களும் அவர் எந்த மதத்தை சார்ந்தவர் போன்ற விவாதங்களும் சமூக வலைதளத்தில் அடிக்கடி நடந்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் விக்ரம் ராஜராஜ சோழன் பெருமைப்படுத்தி பேசி இருந்தார். அதில் 'நாம் எகிப்தில் உள்ள பிரமிடுகள் பற்றி பேசுகிறோம். அதை எப்படி கட்டி இருப்பார்கள் என்றெல்லாம் யோசிக்கிறோம். ஆனால், அதேபோல் நாம் இந்தியாவில் நிறைய கோயில்கள் இருக்கின்றன. அதிலும் உலகத்திலேயே உயரமான கோபுரத்தை கொண்ட கோவில் என்றால் தஞ்சை பெரிய கோவில் தான். சோழர்கள் காலத்தில் அந்த கோவில் கட்டப்பட்டது.

https://twitter.com/raajaboss/status/1573716418063118337

ராஜராஜ சோழன் தான் அந்த கோவிலை கட்டினார். அந்த கோவில் கோபுரத்தின் உச்சியில் உள்ள கல் மட்டுமே 80 டன் எடை கொண்டது. நமக்கும் பிரமிடுகள் பற்றியும், சைவ கோபுரம் பற்றியும் தான் தெரியுமே தவிர நம்முடைய புகழ் வாய்ந்த தஞ்சை கோவிலை பற்றி பலருக்கும் தெரியாது. ஆனால், கோயில் முன்பு என்று செல்ஃபி போட்டோ எல்லாம் எடுக்கிறோம். பழங்கால கோவிலில் இன்றும் தரமான திடமான பழங்கால கோவில்கள் நம் நாட்டில் இருக்கிறது என்றும் பேசி இருந்தார்.

ராஜ ராஜசோழன் குறித்து ரஞ்சித் :

விக்ரமின் எந்த பேச்சை தொடர்ந்து ராஜராஜ சோழன் பற்றிய பல வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆனது அதிலும் குறிப்பாக ரஞ்சித் பேசிய வீடியோ ஒன்று வைரலானது. கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 5-ல் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்க நிறுவனத் தலைவர் உமர்பாரூக்கின் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரஞ்சித் 'பா.ரஞ்சித் பேசுகையில், மாமன்னன் ராஜராஜ சோழன் காலம் தான் பொற்காலம் என்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=LAHTVA36jk8

அவரது ஆட்சி காலம் இருண்ட காலம்

ஆனால் அவரது ஆட்சி காலம் இருண்ட காலம். இங்கு நிறைய பேர் ராஜ ராஜ சோழன் எங்கள் ஜாதி என்று சொல்கிறார்கள். பறையர் அமைப்புகள் உட்பட மொத்தம் எட்டு பேர் ராஜ ராஜ சோழன் எங்கள் ஜாதி என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள்.ராஜ ராஜ சோழன் என் ஜாதியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. தஞ்சை டெல்டா பகுதியில் மிகப்பெரிய சூழ்ச்சியில் என்னுடைய நிலம் பறிக்கப்பட்டது அவனுடைய ஆட்சி காலத்தில் தான்.சாதி ரீதியான ஒடுக்கு ஒரு முறை ஆரம்பிக்கப்பட்டது அவருடைய ஆட்சிக்காலத்தில் தான் என்று பேசி இருந்தார்.

திராவிடம் குறித்து வெற்றிமாறன் :

அது அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியதோடு ரஞ்சித் மீது பலர் புகார்களும் எழுந்தது. இப்படி ஒரு நிலையில் ராஜ ராஜ சோழன் இந்து இல்லை என்பது போல வெற்றிமாறன் பேசி இருக்கும் வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய வெற்றிமாறன் 'சினிமா என்பது வெகுமக்களை மிக எளிய மக்களை சென்றடைய கூடிய ஒரு கலை வடிவம். சினிமாவை அரசியல் மயமாக்குவது மிகவும் முக்கியம். திராவிடம் சினிமாவை கையில் எடுக்கும் போது கலை கலைக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று நிறைய பேசினார்கள்.

இன்னும் கொஞ்சம் விட்டா அது சிவன் கோவிலே இல்ல பெளத்த கோவில்னு சொல்லிடுவானுங்க - வெற்றிமாறனுக்கு எதிராக  பாய்ந்து வரும் பாஜக

ஆனால், மக்களில் இருந்து விலகி எந்த கலையும் முழுமை அடையாது. மக்களுக்காக தான் கலை மக்களை பிரதிபலிப்பது தான் கலை. இந்த கலையை சரியாக இன்று நாம் கையாள வேண்டும். ஒருவேளை நாம் இன்று அதை தவறினால் ரொம்ப சீக்கிரமாக நிறைய அடையாளங்களை இழந்து விடுவோம். வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கப்படுவதாக இருக்கட்டும் ராஜராஜ சோழன் ஒரு இந்து அரசனாக்குவது இருக்கட்டும் என்று பல அடையாளங்களை நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டு வருகிறார்கள். இது சினிமாவிலும் நடக்கும்.

https://twitter.com/MCKILUMINATI69/status/1573984217121566721

சினிமாவிடம் இப்படி தொடர்ந்து அடையாளங்களை எடுக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். வெற்றிமாறனின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் தற்போது விவாதம் ஆகியிருக்கிறது. இப்படி ஒரு நிலையில் வெற்றிமாறனின் இந்த பேச்சுக்கு பா ஜ க பிரமுகர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இன்னும் கொஞ்சம் விட்டா அது சிவன் கோவிலே இல்ல பெளத்த கோவில்னு சொல்லிடுவானுங்க - வெற்றிமாறனுக்கு எதிராக  பாய்ந்து வரும் பாஜக

பா ஜ க பிரமுகர்கள் கேள்வி :

அந்த வகையில் H ராஜா 'சிவன் கோவில் கட்டிய மாமன்னன் என்ன இஸ்லாமியரா அல்லது கிறித்தவரா, பௌத்தரா என்பதை அந்த தற்குறி சொல்லட்டும், என்று காட்டமாக வெற்றிமாறனை குறிப்பிட்டு உள்ளார். இவரை தொடர்ந்து பா ஜ கவை சேர்ந்த JSK கோபி ''வெற்றிமாறன் பேசியதை நாம் சாதாரணமாக கடந்து விட்டால் இன்னும் சில வருடங்களில் ராஜராஜ சோழன் கட்டியது சிவன் கோயிலை இல்லை பௌத்த கோயில் என்று திருமாவளவன் கோஷ்டி கிளம்பி விடுவார்கள் விழித்துக் கொள் நடுநிலை இந்துவே' என்று பதிவிட்டுள்ளார்.

தலைப்புகள்
#H ராஜா#வெற்றிமாறன்#vetrimaran#ராஜ ராஜ சோழன்#H Raja
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement