அந்த விசயத்துல அஜித் சார் நிலைப்பாட்டில் நான் முரண்படுகிறேன், ஆனா – எச் வினோத அளித்த பேட்டி.

0
440
ajith
- Advertisement -

படத்தின் ப்ரோமோஷனுக்கு அஜித் வராததற்கான காரணம் குறித்து வினோத் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். மேலும், அஜித்தின் வலிமை படம் வசூலில் வாரி இறைத்து இருந்தது என்று படத்தின் தயாரிப்பாளரே அறிவித்து இருந்தார். தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர்.

- Advertisement -

துணிவு படம் :

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கியது. அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். அதோடு இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. இதனால் அஜித் இந்த படத்திற்காக 20 முதல் 25 கிலோ வரை எடை குறைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துவிட்டது.

படத்தின் கதை :

துணிவு படம் ஒரு வங்கி கொள்ளை சம்பந்தமான கதை என்ற தகவல் அனைவரும் அறிந்த ஒன்று. பஞ்சாப் மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து தான் இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ பாடல் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த பாடலை அனிரூத் பாடி இருக்கிறார். இந்த பாடலை வைசாக் எழுதி இருக்கிறார். இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-

வினோத் அளித்த பேட்டி:

இந்த நிலையில் எச் வினோத் அவர்கள் பேட்டி ஒன்று கொடுத்து இருக்கிறார். அதில் அவரிடம் கேட்ட பல கேள்விகளுக்கு சுவாரசியமான பதிலையும் அளித்திருந்தார். அப்போது அஜித் அவர்கள் ஏன் படங்களின் ப்ரோமோஷனுக்கு வர மறுக்கிறார்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்கு வினோத் கூறியிருந்தது, அஜித் சார் ப்ரோமோஷனுக்கு வர மாட்டார் என்ற விஷயம் தெரிந்து தானே தயாரிப்பாளர்கள் அவரை வைத்து படம் பண்ணுறாங்க.

அஜித் குறித்து சொன்னது:

ப்ரோமோசனுக்கு வருவேன் என்று நம்பிக்கை கொடுத்து அஜித் சார் ஏமாற்றவில்லையே. இது மார்க்கெட்டிங் உலகம். பணம் பார்க்கணும் என்றால் மார்க்கெட்டிங் பண்ணித்தான் ஆகணும். குண்டூசி விற்க கூட மார்க்கெட்டிங் முக்கியம். அதனால் நானே அஜித் சார் நிலைப்பாட்டில் இருந்து முரண்படுகிறேன். ஆனால், ஒருவரின் கொள்கை முடிவில் தலையிட நாம் யார்? என்று கூறியிருக்கிறார். இப்படி வினோத் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement