அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அஜித் அவர்களின் வலிமை படம் பொங்கலன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை வினோத் இயக்கி இருக்கிறார். போனிகபூர் தயாரித்துள்ளார். வலிமைப்படத்தின் அப்டேட்டுகள் சோஷியல் மீடியாவில் வருவதால் ரசிகர்கள் அனைவரும் பயங்கர குஷியில் உள்ளார்கள். இந்நிலையில் இயக்குனர் வினோத் குமார் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் வலிமை படம் குறித்தும் அஜீத் குறித்தும் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

கதையை கேட்கமாட்டார் :

அதில் அவர் கூறியிருப்பது, அஜித் சாரை பொறுத்தவரை கதையை முழுதாக கேட்க மாட்டார். இயக்குனரிடம் வரியை மட்டும் கேட்டுவிட்டு கதையில் நான் என்ன பண்ணுகிறேன்? என்னுடன் கூட நடிப்பவர்கள் என்ன பண்ணுவார்கள்? என்று மட்டும் தான் கேட்பார். பின் நான் படம் பண்ண தொடங்கினேன். அப்போது அஜித் சார் ஒரு விஷயம் சொன்னார். அது, எப்ப பார்த்தாலும் யோசித்துக் கொண்டிருக்கும் நாம் யோசிக்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் மக்களுக்காக ஒரு படம் கொடுக்கணும். அதை நினைவில் வைத்துக்கொண்டு படம் எடுங்கள் என்று சொன்னார். அதை வைத்து தான் நானும் இந்த படத்தை எடுக்கத் தொடங்கினேன்.

Advertisement

அஜித் படமா ? வினோத் படமா ?

அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்காக அவர் முழுசாக தன்னை ஒப்படைத்து விட்டார். என்னுடைய அனுபவத்தில் சொல்லுகிறேன், அவர் முழு கதையும் கேட்டதே இல்லை. சில காட்சிகளை எடுக்கும் போது இதுதான் கதையா? என்று ஜாலியாக கேட்பார். மேலும், நம்ம என்ன சொல்கிறோமோ? அதை கச்சிதமாக செய்து முடிப்பார். இது அஜித் படமா? வினோத் படமா? என்று சொன்னால் நான் அஜித் படம் தான் என்று சொல்லுவேன். ஏன்னா, நான் அஜித் சாரை வைத்து பண்ணியது 2 படம் தான்.

அந்த ஒரு படத்திலும் இருந்த குற்றம் குறைகளை மன்னித்து மக்கள் என்னை வெற்றியடைய செய்தார்கள். இதற்கெல்லாம் முழு காரணம் அஜித் சார் தான். மேலும், ரசிகர்கள் இரண்டு வருடமாக அஜித் சாரை திரையில் பார்க்காமல் கவலையில் இருப்பார்கள். அதனால் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில்; ரசிக்கிற மாதிரியும், கொண்டாடுகிற மாதிரியும் தான் நிறைய விஷயங்களை படத்தில் பண்ணியிருக்கிறோம். அதேசமயம் குடும்பத்துடன் பார்க்கும் மாதிரி தான் சில விஷயங்களும் படத்தில் இருக்கிறது. அதே போல் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு நடிகர்களை தேர்வு செய்து இருந்தோம். அப்போது அஜித் சார் என்னிடம் அர்ஜுன் தாஸ், பிரசன்னா பெயரை சொன்னார்.

Advertisement

மாற்றப்பட்ட வில்லன்கள் :

நான் சரியாக வரது என்று சில காரணங்களை சொன்னேன். அவரும் சரி என்று சொன்னார். பின் மலையாள நடிகர் ஒருவரை சொன்னேன். உடனே அவரும் உங்களுக்குத் தோன்றுவதை செய்யுங்கள் என்று சொன்னார். ஆனால், அப்போது அந்த நடிகருடைய கால்ஷீட் கிடைக்காததால் தெலுங்கு நடிகர் கார்த்திக்கேயா வைத்து பண்ண நினைத்தோம். மேலும், அவர் படங்களில் ஹீரோவாக பண்ணுகிறேன். ஆனால், அஜித் சாருக்காக நான் வில்லனாக பண்ண தயார் என்று ஒத்துக்கொண்டார். பின் கார்த்திகேயா வைத்து படப்பிடிப்பை தொடங்கினோம்.

Advertisement

ஒன்றரை வருடம் வெளியில் வர முடியவில்லை :

அப்போது இரண்டு,மூன்று நாள் படப்பிடிப்பு நடந்து முடிந்தவுடன் நான் அஜித் சாரிடம் கார்த்திகேயாவுக்கு பதில் நீங்க சொன்ன மாதிரி அர்ஜுன் தாஸ்,பிரசன்னா வைத்து பண்ணலாமா? என்று கேட்தெண். அதற்கு அஜித் சார், தயவு செய்து அந்த மாதிரி பண்ணாதீர்கள். இது என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கிறேன். நானும் இந்த மாதிரி ஒரு படத்தில் இரண்டு நாட்கள் நடித்து விட்டு உடனே வேறு ஒரு நடிகரை வைத்து படம் எடுத்தார்கள். அதற்கு பிறகு எல்லோரும் ஏன் அந்த படத்திலிருந்து போனீர்கள்? என்ன பிரச்சினை? என்று தேவையில்லாமல் வதந்திகளை கிளப்பி இருந்தார்கள். இதனால் ஒன்றரை வருடம் நான் மனரீதியாக ரொம்ப பாதிக்கப்பட்டு இருந்தேன்.

அதனால் அவருடைய கேரியரே வீணாகி விடும். அப்படி பண்ணாதீர்கள் என்று சொன்னார். அந்த அளவிற்கு அடுத்தவர்களைப் பற்றி யோசிக்கும் நல்ல உள்ளம் கொண்டவர் அஜித் சார். அதுமட்டும் இல்லாமல் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் சினிமா தொழிலாளர்களுக்கு பெப்சி நிறுவனத்தின் மூலம் உதவி செய்தவர். அதற்கு நான், நீங்க எவ்வளவு கொடுத்தாலும் எவ்வளவு கோடிகள் கொடுத்தாலும் இது தொழிலாளர்களுக்கு பத்தாது. அவர்களுக்கு வேலை கொடுப்பதுதான் சரி என்று சொன்னேன். அதோடு எல்லா துறையும் திறந்து விட்டார்கள். ஆனால், சினிமா துறையில் மட்டும் வேணாம் என்று சொல்கிறார்கள், ஆங்காங்கே கம்பெனியில் 5000 பேருக்கு மேல வேலை செய்கிறார்கள் அவர்களுக்கு எல்லாம் அனுமதி தருகிறார்கள்.

முதல்வருடன் சந்திப்பு :

ஆனால், ஐம்பது, நூறு பேரை வைத்து படம் எடுக்கும் நமக்கு மட்டும் அனுமதி இல்லை என்று நான் கூறினேன். உடனே அஜித் சார் நீங்கள் போய் முதலமைச்சரை பாருங்கள். அவரிடம் மனு எழுதிக் கொடுங்கள் என்று சொன்னார். நான் முதலில் தயங்கினேன். உடனே அவர் நான் அவரிடம் அனுமதி வாங்கி தரேன் நீங்கள் போய் மனு எழுதிக் கொடுங்கள் என்று சொன்னார். அதேபோல் மனு கொடுத்த மாதிரி எங்களுக்கும் வலிமை எடுக்க அனுமதி கிடைத்தது. உண்மையாலுமே கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் முதலில் நடிக்க வந்த மிகப்பெரிய நடிகர் அஜித் தான்.

அதுமட்டுமில்லாமல் அஜித் படங்கள் எல்லாமே அதிகம் ஹைதராபாத்தில் தான் நடைபெறும். ஆனால், சென்னையில் நடைபெற்றால் பல தமிழர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கேட்டார்கள். ஆனால், சென்னை ரோடுகளில் அனுமதி வாங்குவது ரொம்ப கஷ்டம். அதே மாதிரி அஜித் வைத்து ரோட்டில் படம் எடுக்கும் போது மக்களை பாதிக்கும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும், பிரச்சினை ஏற்படும் என்பதால் தான் ஹைதராபாத்தில் அதிகம் எடுத்தோம். அதுமட்டுமில்லாமல் ஹைதராபாத்தில் தமிழ்நாட்டில் இருந்து 70 சதவீதம் பேரை அழைத்துக்கொண்டு போய் தான் நாங்கள் படத்தின் சூட்டிங் எடுத்தோம்.

மற்றவர்களை பற்றி யோசிப்பவர் :

மேலும், எல்லோரும் தீபாவளிக்கு பட்டாசு வெடித்து கொண்டிருந்த போது நான் இதே கொரோனா பிரச்சினை வரவில்லை என்றால் இந்த தீபாவளிக்கு நம்முடைய வலிமை படம் ரிலீசாகி இருக்கும் சார் என்று சொன்னேன். உடனே அவர் தொழிலாளர்களும் சம்பளம் போயிருக்கும் இல்லை, எல்லோரும் சந்தோசமாக தீபாவளி கொண்டாடுவார்கள் அல்லவா! என்று தொழிலாளர்களை தான் நினைத்தார். தொழிலாளர்கள் தினத்தில் பிறந்து தொழிலாளர்களைப் பற்றி நேசிக்கும் ஒரே உள்ளம் கொண்டவர் அஜித் சார் என்று சொன்னார். இப்படி வினோத் பேசிய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement