KH233 அப்டேட் : கமல் படத்தில் இருந்து விலகும் வினோத்? இது தான் காரணமா?

0
291
- Advertisement -

இயக்குனர் எச். வினோத் இயக்கும் படத்திலிருந்து கமல் விலகி இருக்கும் தகவல் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக எச்.வினோத் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் முதன்முதலாக சதுரங்க வேட்டை என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை அடுத்து இவர் அஜித்தை வைத்து நேர் மேற்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை கொடுத்து இருந்தார். இந்த மூன்று படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருந்தது. இதனை அடுத்து தற்போது இயக்குனர் ஹச் வினோத் அவர்கள் கமலஹாசனை வைத்து படம் இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.

- Advertisement -

ஹச் வினோத்- கமலஹாசன் கூட்டணி:

அந்த படத்தை கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தான் தயாரிக்க இருந்தது. இது கமலஹாசனின் 233 வது படமாகும். இது தொடர்பாக கமலஹாசன், வினோத் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி இருந்தது. மேலும், இந்த படம் விவசாயம் சார்ந்த கதையாக இருக்கும் என்றெல்லாம் கூறியிருந்தார்கள் . இந்த படத்தில் யோகி பாபு, விஜய் சேதுபதி எல்லாம் நடிக்கிறார்கள் என்று கூறப்பட்டது.

படத்தில் இருந்து விலகிய கமல்:

பின் இந்த படம் அறிவிப்பு சம்பந்தமான வீடியோவில் சிவப்பு வர்ணம் அடங்கிய பின்னணியில் கமலஹாசன் கையில் தீபந்தம் வைத்துக் கொண்டிருந்தார். இந்த படத்தின் தலைப்புக்கு ரைஸ் டு ரூல் என்று வாசகமும் இடம்பெற்று இருந்தது. இந்த நிலையில் வினோத் இயக்கும் படத்திலிருந்து கமல் விலகி இருக்கும் தகவல்தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, வினோத் அவர்கள் போலீஸ் கதை ஒன்றை தான் கமலுக்கு சொல்லி இருக்கிறார்.

-விளம்பரம்-

கமல் விலக காரணம்:

மீண்டும் இந்த கதையில் நடிக்க கமலுக்கு விருப்பம் இல்லையாம். ஏற்கனவே வினோத் அவர்கள் தீரன் அதிகாரம் ஒன்று என்ற போலீஸ் கதை எடுத்திருந்தார். இந்த படத்தினுடைய அடுத்த பாகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் வினோத் அவர்கள் தீரன் அதிகாரம் ஒன்று படத்தினுடைய அடுத்த பாகமாக இந்த புது படத்தை உருவாக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இருந்து கமல் மட்டும் தான் விலகி இருக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இதிலிருந்து முழுமையாக வெளிவரவில்லை என்று கூறப்படுகிறது.

கமல் திரைப்பயணம்:

தற்போது கமல் அவர்கள் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 என்ற படத்தில் நடித்து இருக்கிறார். பல போராட்டங்களுக்குப் பிறகு இந்த படம் முழுமையாக எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து கமல் அவர்கள் பாலிவுட்டில் ப்ராஜெக்ட் கே என்ற படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இந்த படத்தில் இவர் வில்லனாக நடிக்கிறார். இதை அடுத்து மணிரத்தினம் இயக்கும் ஒரு படத்தில் கமலஹாசன் நடிக்கிறார். அதன்பின் கமல் இன்னும் சில படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement