தளபதி 69 படம் குறித்து இயக்குனர் ஹெச். வினோத் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. மேலும், விஜய் அவர்கள் கடைசியாக தளபதி 69 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். காரணம், இவர் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதால் சினிமாவில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதனால் தளபதி 69 படத்தோடு விஜய் சினிமாவுக்கு பாய் சொல்ல இருக்கிறார். தளபதி 69 படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற பல படங்களை இயக்கி இருந்தார். இந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து தற்போது முதல் முறையாக இவர் விஜயுடன் கூட்டணி வைக்க இருக்கிறார்.
தளபதி 69 படம் :
அதுமட்டுமில்லாமல் இதுதான் விஜயின் உடைய கடைசி படம். இந்த படத்துக்கு பிறகு இவர் முழுநேர அரசியலில் ஈடுபட இருப்பதாக அறிவித்தது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை தந்தாலும் இன்னொரு பக்கம் உற்சாகத்தை அளித்து இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் விஜய் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பார்? எப்படிப்பட்ட படம்? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழா நிகழ்ச்சியில் வினோத் கலந்து இருந்தார்.
இயக்குனர் எச்.வினோத் சொன்னது:
அப்போது அவரிடம் தளபதி 69 படம் குறித்த அப்டேட்டை கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர், இந்தப் படத்தில் நாங்கள் கமிட்டான உடனே விஜய் சார் என்னிடம் முதலில் சொன்னது, இந்த படம் அனைத்து வயதினரும் பார்க்கும் விதமாக இருக்க வேண்டும். எல்லோருமே என்னுடைய படத்தை பார்ப்பார்கள். இந்த படத்தை அரசியல் தலைவர்கள் கூட பார்ப்பார்கள். இதனால் எந்த ஒரு அரசியல் தலைவரையும், கட்சியையும் தாக்கி இருக்கக்கூடாது.
Thalapathy 69 movie commercial 🔥🔥🔥🔥🔥
— Thalapathy addict ❤️TVK🔥🔥🔥 (@mukilan46998215) August 16, 2024
H.vinoth. Confirm 💯 💯 💯 pic.twitter.com/8Qavh6VC1d
தளபதி 69 படம் குறித்து சொன்னது:
கொஞ்சம் அரசியல் காண்பித்து, முழுக்க முழுக்க கமர்சியல் படமாக இந்த படம் நிறைந்திருக்கும். கண்டிப்பாக இதை 200% விஜய் ரசிகர்களுக்கான படமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், விஜயின் உடைய கோட் படத்தினுடைய ரிலீசுக்கு பிறகு தான் தளபதி 69 படத்திற்கான அப்டேட்டுகள் வெளியாக இருக்கும். இந்த படத்தில் சமந்தா, மம்தா பைஜி ஆகியோர் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

கோட் படம்
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் படம் ‘கோட்’. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இணைந்து இருக்கிறார். இந்த படத்தில் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், இவானா உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.






