பிரபல நடிகை ஷோபனா முகநூலில் கைவரிசையை காட்டிய ஹேக்கர்கள்- போலீசில் புகார்.
தென்னிந்திய சினிமா திரை உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சோபனா. இவர் மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து பட்டையை கிளப்பினார். இவர் இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். சோபனா அவர்கள் திரைப்பட நடிகை என்பதை விட புகழ்பெற்ற பரத நாட்டிய கலைஞர் ஆவார். இவர் தன்னுடைய பரதநாட்டியக் கலைக்காக பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார்.
இந்நிலையில் நடிகை சோபனா அவர்கள் சமூக வலைத்தளங்கள் குறித்து ஒரு செய்தியை பகிர்ந்து உள்ளார். அதில் அவர் தன்னுடைய பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். சமீப காலமாகவே சினிமா பிரபலங்களின் முகநூல், சமூக வலைத்தளங்கள் என அனைத்தும் ஹேக் செய்யப்பட்டு வருகிறது.
அதுமட்டுமில்லாமல் சினிமா பிரபலங்களின் பெயர்களில் பொய்யான போலி கணக்குகளை உருவாக்கி அதை தவறாக பயன்படுத்தி வருகின்றார்கள். இதற்கு காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகை சோபனா அவர்களின் முகநூல் ஹாக் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
https://www.instagram.com/p/B_PVTUVgl4N/
இது குறித்து நடிகை சோபனா அவர்கள் கூறியிருப்பது, எனது ஃபேஸ்புக் பக்கம் மற்றும் கணக்கை யாரோ ஒருவர் தொடர்பு கொண்டு உள்ளார். பின் அவர்கள் என்னுடைய முகநூலை பயன்படுத்தி ஹேக் செய்துள்ளார்கள். இது குறித்து நான் காவல்துறை இடம் தெரிவித்து உள்ளேன். முகநூல் முழுமையாக என்னுடைய கட்டுப்பாட்டுடன் வந்தவுடன் நான் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பேன்.
இந்த செய்தியை மற்றவர்களுக்கும் அனுப்புங்கள். என்னுடைய முகநூல் வாயிலாக வரும் செய்திகள் எல்லாம் நான் அனுப்புவது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடிகை சோபனாவின் பேஸ்புக் ஹேக் செய்யப்பட்டது குறித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நடிகை சோபனா அவர்கள் திருவிதாங்கூர் சகோதரிகளான இலலிதா, பத்மினி மற்றும் இராகினி ஆகியோரின் மருமகள் ஆவார்.
இவர்கள் மூவரும் பாரம்பரிய இந்திய நடனக் கலைஞர்கள். அதுமட்டும் இல்லாமல் இவர்கள் மூவரும் சிறந்த நடிகைகள் ஆவர். நடிகை சுகுமாரி அவர்கள் இவரது தந்தைவழி அத்தையாவார். மலையாள நடிகை அம்பிகா சுகுமாரன், மலையாள நடிகர்கள் வினீத் மற்றும் கிருட்டிணா இவரது உறவினராவர். நடிகை சோபனா அவர்கள் அனந்தநாராயணி என்பவரை வளர்ப்பு மகளாக்கிக் கொண்டார்.