குட்டி குஷ்பூ ஹன்சிகாவிற்கு திருமணம், மாப்பிள்ளை யார் தெரியுமா ? திருமணம் எப்போது தெரியுமா ?

0
505
hansika
- Advertisement -

ஹன்சிகாவின் வருங்கால கணவரின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தான் அறிமுகம் ஆனார். அதன் பின் இவர் வேலாயுதம், எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்-2, சேட்டை, மான் கராத்தே, அரண்மனை 1,2 , ரோமியோ ஜூலியட், போகன்,குலேபகாபலி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

நடிகை ஹன்சிகா அவர்கள் தமிழில் கடைசியாக 2018 ஆம் ஆண்டு விக்ரம் பிரபுவுடன் இணைந்து துப்பாக்கி முனை என்ற படத்தில் நடித்திருந்தார். 2019 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இடையில் இவர் சிம்புவுடனான காதலுக்கு பின்னர் படங்களில் கவனம் செலுத்தவில்லை. பின் சிம்பு-ஹன்சிகா காதல் பிரேக் அப் ஆனது. அதை அடுத்து நடிகை ஹன்சிகா நடன புயல் பிரபு தேவாவுடன் காதலில் இருந்ததாகவும் சில செய்திகள் வெளியாகி இருந்தது.

- Advertisement -

ஹன்சிகா திரைப்பயணம்:

ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாமல் இருந்தது. தற்போது இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் மஹா. இந்த படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. ஹன்சிகாவின் 50-வது படமாக ‘மஹா’ வெளியாகி இருக்கிறது. இப்படத்தை ஜமீல் இயக்கி இருக்கிறார். ‘எட்ஸெட்ரா எண்டெர்டெய்ன்மெண்ட்’ இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.

ஹன்சிகா நடித்த படம்:

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். ஆனால், படம் ஒன்றும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. மேலும், ஹன்சிகா வசம் எந்த படமும் இல்லாததால் இவர் பார்ட்டி, கிளப் என தோழிகளுடன் ஜாலியாக ஊர் சுற்றி சந்தோசமாக என்ஜாய் பண்ணி கொண்டு இருக்கிறார். இது ஓரு பக்கம் இருக்க, சமீப காலமாக ஹன்சிகா கூடிய விரைவிலயே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் உலா வந்து கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

ஹன்சிகா திருமணம்:

அதற்கான ஏற்பாடுகளும் ஜெய்பூர் அரண்மனையில் நடைபெற்று வருகிறது என்ற தகவலும் சில வாரங்களுக்கு முன்பே வெளியாகியிருந்தது. ஆனால், அது பற்றி ஹன்சிகா எதுவுமே எந்த ஒரு விளக்கத்தையும் கூறாமல் இருந்தார். இந்த நிலையில் ஹன்சிகா திருமணம் செய்து கொள்ளும் நபருடைய புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, டிசம்பர் நான்காம் தேதி ஹன்சிகா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

ஹன்சிகா திருமணம் செய்து கொள்ளும் நபர்:

நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான Sohail Kathuria என்பவரை தான் ஹன்சிகா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அவர்கள் இருவருமே சேர்ந்து கடந்த சில வருடங்களாக ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட்டையும் நடத்தி வந்திருக்கிறார்கள். டிசம்பர் 2 முதல் 4 ஆம் தேதி வரை இவர்களுடைய திருமண விழா நடைபெற இருக்கிறது. இதை பற்றி ஹன்சிகாவே விரைவில் முறையாக வெளியிடுவார் என்று அறிவிக்கப்படுகிறது. மேலும், ஹன்சிகா திருமணம் செய்து கொள்ள நபரின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement