பொது இடத்தில் ஹிஜாப் அணியாமல் வீடியோ பதிவிட்ட ஈரானிய நடிகையை அந்நாட்டு அரசு கைது செய்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரானின் தெஹ்ரானில் குர்திஷ் வம்சாவளியை சேர்ந்த பெண் மஹ்சா அமினியை போலீசார் கைது செய்திருந்தார்கள். அவருக்கு 22 வயது தான் ஆகி இருந்தது. இவர் போலீஸ் காவலில் இருந்தபோது இறந்துவிட்டார்.

இதை அடுத்து கடந்த இரண்டு மாதங்களாக ஈரானில் போராட்டங்கள் வெடித்திருக்கிறது. மேலும், இஸ்லாமிய குடியரசில் உள்ள அதிகாரிகள், ஹிஜாபுக்கு எதிராக நடைபெறும் எதிர்ப்புகளை கலவரங்கள் என்றும் நாட்டின் மேற்கத்திய எதிரிகள் போராட்டங்களை அங்கே தூண்டுவதாகவும் குற்றம் சாட்டி இருக்கின்றனர்.

Advertisement

இந்த நிலையில் கடந்த வாரம் ஈரானிய நடிகை ஹெங்கமே காசியானி, ‘குழந்தைகளை கொல்லும்’ ஈரானிய அரசாங்கம் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொலை செய்வதாக இன்ஸ்டாகிராமில் அரசாங்கத்தை குற்றம் சாட்டி பதிவிட்டு இருந்தார். அதுமட்டுமில்லாமல் ஹிஜாப்க்கு எதிரான எதிர்ப்பாளர்கள் மீதான ஒடுக்கு முறையை கடுமையாக விமர்சித்தும் கூறியிருந்தார்.

இந்நிலையில் கலவரங்களை தூண்டியதற்காகவும், ஆதரித்ததற்காகவும் எதிர்க்கட்சி ஊடகங்களுடன் தொடர்பு கொண்டதற்காகவும் நடிகை ஹெங்கமே காசியானியை கைது செய்யப்பட்டார். மேலும், ஹிஜாப் இல்லாத வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இவர் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் நடிகை ஹெங்கமே காசியானி ஹிஜாப் பணியாமல் எதுவும் பேசாமல் கேமராவை சிலரின் வினாடிகள் பார்க்கிறார்.

Advertisement

பின் தனது தலை முடியை போனிடெயிலாகக் காட்டுகிறார். இந்த வீடியோவை பதிவிட்டு அவர், ஒரு வேளை இது எனது கடைசி பதிவாக கூட இருக்கலாம். இந்த நிமிடத்தில் இருந்து எனக்கு என்ன நடந்தாலும் சரி எப்போதும் போல எனது கடைசி மூச்சு வரை நான் ஈரானிய மக்களுடன் இருப்பேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இதனை அடுத்து அரசாங்கம் நடிகை ஹெங்கமே காசியானியை கைது செய்திருந்தது. ஹிஜாப் அணிவதற்கு எதிராக பல ஹீரோயினி நட்சத்திரங்களும் தற்போது தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Advertisement