-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

ஹீரோ படத்தில் நடித்த குட்டி பொண்ணா இது ? லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை பார்த்தீங்கனா

0
2871
ivana

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து விட்டு பின்னர் காணாமல் போய்விடுகிறார்கள் அந்த வகையில் நடிகை இவானாவும் ஒருவர். தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் ஜி. வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘நாச்சியார்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. பொதுவாக வித்யாசமான கதை கலங்களை எடுக்கும் பாலா படத்தின் நடிகைகள் அனைவரும் பார்ப்பதற்கு கிராமத்து பெண்ணாகவோ அல்லது பரிதாபமாகவோ தான் இருப்பார்கள்.

-விளம்பரம்-
Ivana

ஜோதிகா ஜிவி பிரகாஷ் என்று ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒரு சில நடிகர்கள் மட்டுமே நடித்த இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை இவானா. கேரளாவில் பிறந்த இவரது உண்மையான பெயர் அலீனா ஷாஜி.கேரள மொழி படங்களில் துணை நடிகியாக பல படங்களில் நடித்துள்ளார். நாச்சியார் படத்தில் பார் பதற்கு ஒரு பட்டிக்காட்டு பெண்ணாக இருந்த இவரை நேரில் பார்த்தால் கண்டிப்பாக நம்ப மாட்டீர்கள்.

ஆம்,நிஜ வாழ்வில் ஒரு மாடர்ன் டீனேஜ் பெண்ணாக தோற்றமலிக்கிறார் நடிகை இவானா. நாச்சியார் படத்திற்கு பின்னர் இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் மதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால், நாச்சியார் படத்தில் நடித்த நடிகை தான் இது என்பது பலரும் அறியாத ஒன்று.

-விளம்பரம்-

மேலும் இவானா கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார். அதன்பின்னர் ராணி பத்மினி அனுராதா கரிக்கின் வெல்லம் போன்ற மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். தற்போது தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் லிஸ்டில் சேர்த்திருக்கிறார் இவனா. ஹீரோ படத்துக்கு பின் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

-விளம்பரம்-

ஹீரோ படத்திற்கு பின்னர் இவர் லவ் டுடே என்ற படத்தில் கமிட் ஆனார். அனால், அந்த படத்தின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இருப்பினும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவானா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலர் ஹீரோ படத்தில் வந்த பொண்ணா இது என்று வாயடைத்து போய்யுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news