சிம்பு பெயரை #metoo லிஸ்டில் சேர்த்த நடிகை..!ரசிகர்கள் ஷாக் ..!

0
589
Simbhu

கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமா துறையை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது இந்த #metoo.பின்னணி பாடகி சின்மயி பிரபல கவிஞ்ர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த பின்னர் பல்வேறு நடிகைகளும், திரைத்துறை கலைஞர்களும் பல பாலியல் குற்ற சாட்டை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் பிரபல எஸ் எஸ் மியூசிக் தொகுப்பாளரும்,நடிகையுமான லேகா வாஷிங்க்டன் தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நடிகர் சிம்புவின் பெயரை #metoo வில் குறிப்பிட்டுள்ளார் என்று ஒரு பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது.

- Advertisement -

தமிழில் “ஜெயம்கொண்டான்,வா கோட்டர் கட்டிங் ” போன்ற படங்களில் நடித்தவர் நடிகை லேகா வாஷிங்டன்.அதே போல சிம்பு நடிப்பில் வெளியாக இருந்து பின்னர் கைவிடப்பட்ட “கெட்டவன்” என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் சம்பீத்தில் நடிகை லேகா வாஷிங்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் “கெட்டவன் :#metoo” என்று பதிவிட்டுள்ளார்.

Lekha

-விளம்பரம்-

இந்த பதிவை கண்ட ட்விட்டர் வாசிகள் பலரும் சிம்புவுடன் கெட்டவன் படத்தில் நடித்தால் தான் நடிகை லேகா வாஷிங்டன் சிம்பு மீது மறைமுகமாக குற்றச்சாட்டை வைத்துள்ளார் என்று கமன்ட் செய்து வந்துள்ளனர்.இதனால் நடிகர் சிம்புவும் #metoo சர்ச்சையில் சிக்கியுள்ளாரா என்று சமூக வலைதளத்தில் பலரும் விவாதத்தை தொடங்கியதும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு எப்போதும் சர்ச்சைக்கு குறைவே இல்லாதா நபராக இருந்து வருகிறார். நயன்தாரா காதல் தொடங்கி பீப் பாடல் வரை சிம்புவின் சர்ச்சைகள் பல இருந்தாலும் தற்போது நடிகை லேகா, சிம்புவை மறைமுகமாக சாட்டியுள்ளது சிம்புவின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement