ஷூட்டிங் துவங்கி கொஞ்ச நாள் கூட ஆகல, அதற்குள் நாயகி மாற்றம் – என்ன நடக்கிறது விடா முயற்சியில்?

0
1859
- Advertisement -

படம் தொடங்கி சில நாட்களிலே விடாமுயற்சி படத்தில் கதாநாயகியை தற்போது மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கோலிவுட்டில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

-விளம்பரம்-

அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார். மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான படம் துணிவு. இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கி இருந்தார். இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

துணிவு படம்:

மேலும், இந்த படத்தை ரெட் ஜெயின்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி ஏகே இருப்பதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியானது.

விடாமுயற்சி படம்:

அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மேலும், நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தினுடைய டைட்டில் போஸ்ட்டர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு விடா முயற்சி என்று பெயரிடப்படுகிறது. அஜித்தின் திரைப்பட வரிசையில் V என்ற வார்த்தை துவங்கும் டைட்டிலில் இது 10வது முறை. அதுமட்டுமில்லாமல் இந்த போஸ்டரில் விடாமுயற்சி என்ற தலைப்பில் ற் எழுத்துக்கு மேல் மேப்பில் உள்ள அடையாளக் குறி இருக்கிறது. இதனால் இந்த படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

-விளம்பரம்-

கதாநாயகி குறித்து தகவல்:

இந்த திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு தான் தொடங்கியுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷாநடிக்க உள்ளார். மற்றொரு கதாநாயகியாக ஹீமா குரேஷி ஒப்பந்தம் ஆகி இருந்தநிலையில் தற்போது அவருக்கு பதிளாக கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயம் ஏன் திரைப்படத்தில் நடித்த ரெஜினா கசண்டரா ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement