சந்திராயன் 3 நேற்று முன் தினம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. இதனை உலகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் இதனை பாராட்டி வந்தனர். இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்க்கும் இந்த நிகழ்வை இஸ்ரோவின் திட்ட இயக்குனர் வீரமுத்து வேல் அவரை தந்தை பழனிவேல் தொலைகாட்சியில் கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தார். அதன் பிறகு அவர் அங்கு இருந்த பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

அதில் அவர் “இன்றைய நாள் இந்தியாவிற்கும், இந்திய மக்களுக்கும், குறிப்பாக தமிழகத்திற்கும் மறக்க முடியாத நாள். அவர்க்கு எப்போது இந்த திட்ட இயக்குனர் பதவி வழங்கப்பட்டதோ அன்று முதல் அவர் எங்க வீட்டிற்கு வந்ததே இல்லை. என்னிடம் பேச கூட மாட்டார். அவரது தங்கைக்கு ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம்நடைபெற்றது அதற்க்கு கூட அவர் வரவில்லை. அவர் வர முடியாது என்றார். திருமணம் ஆகஸ்ட் 20 தேதி நடைபெற்றது அதற்கும் அவர் வர முடியாது என்றார்.

Advertisement

நானும் அது தான் முக்கியம் என்று கூறினேன். இந்தியாவிற்கு உழைக்கும் ஒரு மகனை இந்தியாவிற்கே ஒப்படைக்கிறேன். அதில் இன்று வெற்றி கண்டுள்ளார் என்றால் திருமணத்தை விட இந்த வெற்றி நிகழ்வு தான் எனக்கு பெருமையாக இருக்கிறது. இஸ்ரோ என் மகனுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய நாள் முதல் பெரும் முயற்சி எடுத்து வீட்டிற்கு கூட வரமால் அதனுடைய டீம் சிறப்பாக செயல் பட்டதால் இன்று உலகமே திரும்பி பார்க்கும் வகையில் வெற்றி கண்டுள்ளது.

இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது வரை யாரும் செய்திராத வகையில் இந்திய முதல் முறையாக நிலவின் தென் பகுதியில் முதல் தரை இறங்கியுள்ளது.

Advertisement

இதை பார்க்கும் பொது இந்திய விரைவில் வல்லரசு நாடக மாற வாய்ப்பு உள்ளது.குறிப்பாக பிரதமர் மோடி அவர்கள் மிகவும் முயற்சி எடுத்தார். அவரும் மகிழ்ச்சியில் இருப்பார். நீங்கள் செய்வதை நேரம் எடுத்து பொறுமையாக செய்யுங்கள் என்று நம்பிக்கை அளித்தார். இந்த திட்டத்தை விடாமுயற்சி எடுத்த என் மகனுக்கும் அவரது பெயருக்கு தங்குதார் போல் வீர முத்துவேல் என்ற பெயருக்கு ஏற்ப முயற்சி எடுத்து வீரமாக வெற்றி கண்டத்துக்கு நான் மிகவும் சந்தோஷ படுகிறேன்.

Advertisement

இதில் இந்திய மக்கள் மற்றும் தமிழக மக்கள் நிறைய மக்கள் இந்த திட்டம் வெற்றி பெற வேண்டும் என்று இறைவனை பிராத்தனை செய்து கொண்டு இருந்தனர். பல நாட்களாக இந்த திட்டம் வெற்றி பெற வேண்டும் என்று பிராத்தனை செய்து வந்தார்கள். குறிப்பாக பல திருக் கோவில்களில் அபிஷேகங்கள் நடத்தின. அந்த மக்களுக்கு எல்லாம் நான் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன். ஆகவே இந்த வெற்றியை இந்திய மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியான நாள் மறக்க முடியாத நாள்” என்றும் அவர் கூறினார்.                 

Advertisement