தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். இவரின் படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்போது இவரது மகன் விஜய் கனிஷ்கா ‘ஹிட் லிஸ்ட்’ என்ற படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார். மேலும் இந்த படத்தில் சுப்ரீம் ஸ்டார் ஆர்.சரத்குமார், விஜய் கனிஷ்கா, சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், ஸ்ம்ருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, சித்தாரா, அனுபமா குமார், ராமச்சந்திரா ராஜு, முனிஷ்காந்த், ரெட்டின் கிங்ஸ்லி, ஆகியோர் நடித்துள்ளனர். கே எஸ் ரவிக்குமார் இந்த படத்தை தயாரிக்க அவரது உதவி இயக்குனர்களான சூரியகதிர் காக்கலர் மற்றும் கே.கார்த்திகேயன் ஆகியோர் இயக்கி உள்ளனர். சி.சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா?இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் நடுத்தர வீட்டு பையனான விஜய் கனிஷ்கா ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தனது அம்மா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் விஜய், மிகவும் சாதுவானவர். எந்த ஒரு உயிரையும் கொல்லக்கூடாது என்று நினைப்பவர். இந்நிலையில் முகமூடி அணிந்த ஒரு நபர் இவரின் குடும்பத்தை கடத்தி வைத்துக் கொண்டு, விஜய்க்கு தொடர்ச்சியான பணிகளை கொடுக்கிறார். பணிகளை செய்ய மறுத்தால் அவரது தாய் மற்றும் தங்கையை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுபவர், முதலில் விஜய்யின் வீட்டில் இருக்கும் சேவலை கொல்ல சொல்கிறார். பின்பு ஒரு கும்பலின் தலைவரை கொலை செய்ய சொல்கிறார். இதுபோல் ஆபத்தான விளையாட்டில் சிக்கிக் கொள்ளும் விஜய் அதிலிருந்து எப்படி தப்பிப்பார்? அந்த முகமூடி அணிந்த நபர் யார்? என்பதை திரில்லர் வடிவில் நமக்கு காட்டியுள்ளனர்.

Advertisement

ஆரம்பத்தில் சாதுவாகவும், போகப் போக ஆக்ஷனில் இறங்கியும் விஜய் கனிஷ்கா தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். ஏசிபி கதாபாத்திரத்தில் வரும் சரத்குமார், நச்சென்று பொருந்தியுள்ளார். அவருடைய நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. மேலும் ராமச்சந்திர ராஜு, முனிஷ்காந்த் மற்றும் சித்தாரா உள்ளிட்ட துணை நடிகர்கள், தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். கௌதம் மேனன் மற்றும் ஸ்ம்ருதி ஆகியோர் சிறிய கதாபாத்திரங்களில் வந்தாலும் சிறப்பாக நடித்துள்ளனர்.

ஆரம்பத்தில் படம் சற்று மெதுவாக நகர்ந்தாலும் அடுத்தடுத்து காட்சிகளில் நம்மை படத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குனர். முதல் பாதையில் சில சுவாரசியமான காட்சிகளை வைத்தும், இரண்டாம் பாதியில் நிறைய விஷயங்களை சொல்ல முயற்சியும் செய்துள்ளனர். மேலும் நிறைய காட்சிகளை லாஜிக் மீறல்களும் அதிகம் உள்ளன. இயக்குனர் முதல் பாதியில் செலுத்திய கவனத்தை இரண்டாம் பாதியிலும் செலுத்தியிருக்கலாம்.

Advertisement

சூரியகதிர் காக்கலர் மற்றும் கே.கார்த்திகேயன் இயக்கத்தில் ‘ஹிட் லிஸ்ட்’ படம் திரில்லர் ரசிகர்களுக்கு பிடித்த பாணியில் உருவாகியுள்ளது. படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பக்க பலமாக உள்ளவாறு சி.சத்யா இசை அமைத்துள்ளார். ஜான் ஆபிரகாம் எடிட்டிங் சிறப்பாக உள்ளது. கே.ராம்சரண் நல்ல ஒரு சஸ்பென்ஸ் திரில்லருக்கு ஏற்றவாறு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படி நல்ல திரைக்கதை கொண்ட இப்படம், இன்னும் நன்றாக எடுக்கப்பட்டு இருந்தால் கண்டிப்பாக தமிழில் ஹிட் திரில்லராக மாறி இருக்கும்.

Advertisement

நிறை:

விஜய் கனிஷ்கா மற்றும் ஆர். சரத்குமார் நடிப்பு சிறப்பு.

திரைக்கதை அருமை.

முதல் பாதி சுவாரசியமாக உள்ளது.

பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

குறை:

இரண்டாம் பாதியில் நிறைய விஷயங்கள் லெக்கிங்.

லாஜிக் மீறல்கள் அதிகம் உள்ளன.

மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைகள் படத்தில் இல்லை.

மொத்தத்தில் ஹிட் லிஸ்ட் – நல்ல முயற்சி

Advertisement