Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
H4
Photo: Tamil Behind Talkies
முகப்பு/விமர்சனம்2024.05.31பதிப்பு · TA
விமர்சனம்வாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் விக்ரமனனின் மகன் நடித்த 'ஹிட் லிஸ்ட்' படம் ஹிட்டா ?இல்லையா ? - விமர்சனம் இதோ

எழுதியவர்Rajkumar31 மே, 2024 அன்று 05:15 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். இவரின் படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்போது இவரது மகன் விஜய் கனிஷ்கா 'ஹிட் லிஸ்ட்' என்ற படம் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார். மேலும் இந்த படத்தில் சுப்ரீம் ஸ்டார் ஆர்.சரத்குமார், விஜய் கனிஷ்கா, சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், ஸ்ம்ருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, சித்தாரா, அனுபமா குமார், ராமச்சந்திரா ராஜு, முனிஷ்காந்த், ரெட்டின் கிங்ஸ்லி, ஆகியோர் நடித்துள்ளனர். கே எஸ் ரவிக்குமார் இந்த படத்தை தயாரிக்க அவரது உதவி இயக்குனர்களான சூரியகதிர் காக்கலர் மற்றும் கே.கார்த்திகேயன் ஆகியோர் இயக்கி உள்ளனர். சி.சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா?இல்லையா? என்பதை பார்க்கலாம்.

சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் விக்ரமனனின் மகன் நடித்த 'ஹிட் லிஸ்ட்' படம் ஹிட்டா ?இல்லையா ? - விமர்சனம் இதோ

கதைக்களம்:

படத்தில் நடுத்தர வீட்டு பையனான விஜய் கனிஷ்கா ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தனது அம்மா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் விஜய், மிகவும் சாதுவானவர். எந்த ஒரு உயிரையும் கொல்லக்கூடாது என்று நினைப்பவர். இந்நிலையில் முகமூடி அணிந்த ஒரு நபர் இவரின் குடும்பத்தை கடத்தி வைத்துக் கொண்டு, விஜய்க்கு தொடர்ச்சியான பணிகளை கொடுக்கிறார். பணிகளை செய்ய மறுத்தால் அவரது தாய் மற்றும் தங்கையை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுபவர், முதலில் விஜய்யின் வீட்டில் இருக்கும் சேவலை கொல்ல சொல்கிறார். பின்பு ஒரு கும்பலின் தலைவரை கொலை செய்ய சொல்கிறார். இதுபோல் ஆபத்தான விளையாட்டில் சிக்கிக் கொள்ளும் விஜய் அதிலிருந்து எப்படி தப்பிப்பார்? அந்த முகமூடி அணிந்த நபர் யார்? என்பதை திரில்லர் வடிவில் நமக்கு காட்டியுள்ளனர்.

ஆரம்பத்தில் சாதுவாகவும், போகப் போக ஆக்ஷனில் இறங்கியும் விஜய் கனிஷ்கா தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். ஏசிபி கதாபாத்திரத்தில் வரும் சரத்குமார், நச்சென்று பொருந்தியுள்ளார். அவருடைய நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. மேலும் ராமச்சந்திர ராஜு, முனிஷ்காந்த் மற்றும் சித்தாரா உள்ளிட்ட துணை நடிகர்கள், தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். கௌதம் மேனன் மற்றும் ஸ்ம்ருதி ஆகியோர் சிறிய கதாபாத்திரங்களில் வந்தாலும் சிறப்பாக நடித்துள்ளனர்.

சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் விக்ரமனனின் மகன் நடித்த 'ஹிட் லிஸ்ட்' படம் ஹிட்டா ?இல்லையா ? - விமர்சனம் இதோ

ஆரம்பத்தில் படம் சற்று மெதுவாக நகர்ந்தாலும் அடுத்தடுத்து காட்சிகளில் நம்மை படத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குனர். முதல் பாதையில் சில சுவாரசியமான காட்சிகளை வைத்தும், இரண்டாம் பாதியில் நிறைய விஷயங்களை சொல்ல முயற்சியும் செய்துள்ளனர். மேலும் நிறைய காட்சிகளை லாஜிக் மீறல்களும் அதிகம் உள்ளன. இயக்குனர் முதல் பாதியில் செலுத்திய கவனத்தை இரண்டாம் பாதியிலும் செலுத்தியிருக்கலாம்.

சூரியகதிர் காக்கலர் மற்றும் கே.கார்த்திகேயன் இயக்கத்தில் 'ஹிட் லிஸ்ட்' படம் திரில்லர் ரசிகர்களுக்கு பிடித்த பாணியில் உருவாகியுள்ளது. படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பக்க பலமாக உள்ளவாறு சி.சத்யா இசை அமைத்துள்ளார். ஜான் ஆபிரகாம் எடிட்டிங் சிறப்பாக உள்ளது. கே.ராம்சரண் நல்ல ஒரு சஸ்பென்ஸ் திரில்லருக்கு ஏற்றவாறு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படி நல்ல திரைக்கதை கொண்ட இப்படம், இன்னும் நன்றாக எடுக்கப்பட்டு இருந்தால் கண்டிப்பாக தமிழில் ஹிட் திரில்லராக மாறி இருக்கும்.

சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் விக்ரமனனின் மகன் நடித்த 'ஹிட் லிஸ்ட்' படம் ஹிட்டா ?இல்லையா ? - விமர்சனம் இதோ

நிறை:

விஜய் கனிஷ்கா மற்றும் ஆர். சரத்குமார் நடிப்பு சிறப்பு.

திரைக்கதை அருமை.

முதல் பாதி சுவாரசியமாக உள்ளது.

பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

குறை:

இரண்டாம் பாதியில் நிறைய விஷயங்கள் லெக்கிங்.

லாஜிக் மீறல்கள் அதிகம் உள்ளன.

மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைகள் படத்தில் இல்லை.

மொத்தத்தில் ஹிட் லிஸ்ட் - நல்ல முயற்சி

தலைப்புகள்
#hit list movie review#ஹிட் லிஸ்ட்#hit list movie#ஹிட் லிஸ்ட் விமர்சனம்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி' படம் மக்களை கவர்ந்ததா? இல்லையா? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் 'ஆட்டி' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement