அமெரிக்காவில் பிகில் எப்போது வெளியாகும்.. அட்லீக்கு ட்வீட் செய்த ஹாலிவுட் நடிகர்..
தென்னிந்திய திரைப்பட உலகையே கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் 'இளைய தளபதி விஜய்'. மேலும்,அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 63 வது படமான "பிகில்" படம் அக்டோபர் 27 ஆம் தேதி திரையரங்குக்கு இன்னும் சில நாட்களில் அதாவது தீபாவளி அன்று வெளிவர உள்ளது என்ற தகவல்கள் சமூக வலைத் தளங்களில் ஜெட் வேகத்தில் பரவி வருகின்றது.பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார்.இவர்களோடு விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.மேலும், இந்தப் படத்துக்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைத்துள்ளார். விஜய் நடிப்பில் வரவிருக்கும் விஜயின் 63 வது படமான 'பிகில்' ரசிகர்களிடையே அதிக ஆர்ப்பாட்டத்தையும், ஆவலையும் தூண்டியுள்ளது.
https://twitter.com/RealBillDuke/status/1183034916772167680
அதனின் கொண்டாட்டமாக நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் இசை வெளியீடு விழா தனியார் கல்லூரியில் மீரல வைக்கும் அளவிற்கு நடந்து முடிந்தது.தளபதி ரசிகர்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தது பிகில் படத்தின் டிரைலர் தான்.இதனைத்தொடர்ந்து பிகில் படத்தின் டிரைலர் இணையங்களில் வந்த கொஞ்ச நேரத்திலேயே பல மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பார்த்துள்ளனர்.விஜய் அவர்களின் பிகில் படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு பல பிரபலங்கள் பாராட்டியும், வாழ்த்துகளை தெரிவித்தும் வருகிறார்கள். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தர்ஷன்,முகென், காஜல் ஆகியோரும் பிகில் படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு தளபதி விஜய் தெறிக்க விட்டார் என்று கூறியும் வருகின்றனர்.
இதையும் பாருங்க : ஏஞ்சலீனா ஜோலி மாதிரி வேணும்னு என்ன கமிட் பண்ணாரு.. அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் மீரா..
இது மட்டுமல்ல தமிழ் நடிகர்களின் துவங்கி இந்தி நடிகர் ஹாலிவுட் நடிகர் என்று பலரும் பிகில் படம் குறித்து ட்வீட் செய்துள்ளனர். அந்த வகையில் இந்தி நடிகர் ஷாருக் கான், ஹாலிவுட் நடிகர் பில் டுயூக் கூட ட்வீட் செய்துள்ளார். அதில், சிறந்த ட்ரைலர் அட்லீ, எப்போது இந்த படம் அமெரிக்காவில் வெளியாகும் என்பதை தெரியபடுத்துங்கள் என்று ட்வீட் செய்துளளர். அதற்கு அட்லீயும் நன்றி தெரிவித்துள்ளார்.
https://twitter.com/iamsrk/status/1183023879171690498
இது ஒருபுறம் இருக்க இந்த படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். பிக் பாஸ் சீசன் 3 இன் டைட்டில் வின்னர் முகென்ராவ் தற்போது விஜய்யின் 64 வது படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளிவந்து உள்ளது. தளபதி விஜய் அவர்களுக்கு ரசிகர்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உள்ளார்கள். மேலும், விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி கிப்ட்டாக பிகில் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.விஜய் நடிப்பில் வரும் பிகில் படம் தான் இந்த வருடம் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர் . மேலும், இது தான் விஜய் ரசிகர்களுக்காக கொடுக்கும் ட்ரீட்டு என்று கூறியுள்ளார். இந்த வருடம் ரசிகர்கள் தீபாவளி கொண்டாடுகிறார்களோ? இல்லையோ? ஆனால், விஜய்யின் பிகில் படத்தை வேற லெவல்ல கொண்டாடப் போகிறார்கள் என்று நல்லா தெரியுது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இந்த படத்தில் விஜய் அவர்கள் அப்பா மற்றும் மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார்.இதில் மகனுக்கு "மைக்கேல்" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பாவின் பெயர் "ராயப்பன்" என மிரட்டலான,அதிரடி பெயரை வைத்து உள்ளார்கள். போஸ்டரில் அப்பாவை பார்க்கும்போது கறிகளை வெட்டும் கசாப்கரன் என்று தெரிய வருகிறது. இந்த படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுத்த படம் ஆகும். மேலும்,இதற்காக விஜய் ரசிகர்கள் 'தளபதி 63' என்ற ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி அதில் விஜய் படம் சம்பந்தமான தகவல்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் பிகில் படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் கண்டு கழிக்கும் ஒரு அற்புதமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த படத்திற்காக விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக உள்ளார்கள் என்ற தகவல் வெளி வந்துள்ளது