ஹரித்திக் ரோஷனுடன் இணையும் தனுஷ்.! ஹரித்திக் ரோஷன் கொடுத்த விளக்கம்.!

0
1615
Dhanush
- Advertisement -

நடிகர் தனுஷ் பன்முக திறமைகள் கொண்ட ஒரு சிறந்த கலைஞர் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். தமிழ் சினிமாவின் ஒரு ஆடையாள நடிகராக இருந்து வரும் நடிகர் தனுஷ், தற்போது பிரபல ஹாலிவுட் இயக்குனர் கென் ஸ்காட் இயக்கியுள்ள ” தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆஃப் பகீர் ” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் மே 30 ஆம் தேதி வெளியானது.

-விளம்பரம்-
hrithik roshan

தனுஷ் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த பாடகர், கவிஞர் என்று பன்முக திறமைகளை வைத்துள்ளார் , சமீபத்தில் இவர் இயக்கிய “பா. பாண்டி” என்ற படத்தின் மூலம் தான் ஒரு நல்ல இயக்குனர் என்பதையும் நிரூபித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் மற்றும் ஒரு படத்தை இயக்க போகிறாராம்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் தனுஷின் பிறந்தநாள் விழா நேற்று அமோகமாக அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை அளித்த கலைப்புலி எஸ்.தாணு தனுஷுக்கு இளைய சூப்பர் ஸ்டார் என்று பட்டத்தை தனுஷ் பிறந்தநாள் விழா ஒன்றில் அறிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் நமக்கு பட்டமெல்லாம் வேண்டாம், ரசிகர்களின் அன்பு போதும் என்றார்.

Related image

இந்நிலையில் மீண்டும் நடிகர் தனுஷ் பாலிவுட்டில் நடிக்க இருக்கிறார். ஆனந்த எல் ராய் இயக்கும் இந்த படத்தில் ஹிருத்திக் மற்றும் தனுஷ் என இருவரும் நடிக்கிறார்கள் என்று தகவல் வெளியானது. இதையடுத்து இச்செய்தியை ஹிருத்திக் ரோஷன் மறுத்துள்ளார். இது ஒரு வதந்தி, அப்படி ஒரு பேச்சு வார்த்தையே நடைபெறவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். தனுஷ் ஹிந்தி திரைப்பட துறையில் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-


Advertisement