விவாகரத்து செய்த முன்னாள் மனைவியுடன் சேரும் பிரபல நடிகர் – புகைப்படம் உள்ளே..!

0
2071
khan
- Advertisement -

பாலிவுட் நடிகர்களில் பல்வேறு நடிகர்கள் 90முதல் இன்று வரை பல ரசிகர்களை கொண்டிருக்கின்றனர். மேலும் பாலிவுட் நடிகர்களான சல்மான் கான், ஷாருக் கான் இவர்களுக்கு மத்தியில் தனக்கென்று ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தை பிடித்தவர் ஹ்ரித்திக் ரோஷன். இதுவரை குறைந்த பட்ச படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பாலிவுட்டில் இன்றும் இவருக்கு ஒரு தனி அந்தஸ்த்து உண்டு.

-விளம்பரம்-

Hrithik-Roshan

- Advertisement -

ஹ்ரித்திக் ரோஷன் 2000 ஆண்டு சுச்சன்னே கான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார், திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ரிஹான் மற்றும் ரிதான் என்று இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தது. திருமணமாகி சில ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவருக்கும் பிரச்னை ஏற்பட பின்னர் இவர்கள் இருவரும் 2014 ஆம் ஆண்டு பரஸ்பர விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது 44 வயதாகும் ஹ்ரித்திக் ரோஷன் கடந்த 4 ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை பிரிந்து தனியாக தான் வாழ்ந்து வருகிறார்.

இதர்கிடையில் பாலிவுட் நடிகை கங்கான ரணாவத் துடன் ஒரு சில சர்ச்சைகளில் சிக்கி பின்னர் எப்படியோ மீண்டு வந்து விட்டார். இந்நிலையில் ஹ்ரித்திக் ரோஷன் தனது மனைவியுடன் விரைவில் சேர்ந்து வழ போவதாக ஒரு சில தகவல்கள் வந்துள்ளது. இவர்கள் இருவருமே அடிக்கடி பார்ட்டி பீச் என்று கடந்த சில மாதங்களாக சந்தித்து வருகிறார்களாம். மேலும் சமீபத்தில் கூட ஹ்ரித்திக் ரோஷன் தனது இரு மகன்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று கூட சமூக வலைத்தளத்தில் பரவியது.

-விளம்பரம்-

hrithik-susanne

இதையெல்லாம் தாண்டி சமீபத்தில் மும்பை பத்திரிகை ஒன்றில் ” ஹ்ரித்திக் ரோஷன் தனது மனைவியுடன் விரைவில் சேர்ந்து வாழ போவதாகவும். அதனால் அவருக்கும் மும்பை பிரதான ஏரியா ஒன்றில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு வீட்டை கூட வாங்கியுள்ளார் ” என்று தகவல்கள் கூட வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement