புதிய வீட்டை சுற்றிக் காட்டிய ஹுசைன் மணிமேகலை – வைரலாகும் Home Tour வீடியோ.

0
411
mani
- Advertisement -

மணிமேகலை பதிவிட்ட லேட்டஸ்ட் ஹோம் டூர் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக வேலை பார்த்து இருந்தவர் மணிமேகலை. அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் தனியார் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். பின் மணிமேகலை மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார்.

-விளம்பரம்-
manimegalai

அதுமட்டும் இல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். ஆனால், இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். மேலும், பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணி புரிந்து வருகிறார்.

- Advertisement -

மணிமேகலை-உசேன் திருமணம்:

அதோடு ஹுசைனின் மதத்திற்கு மணிமேகலை மாறாததால் ஹுசைன் வீட்டிலும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. சமீபத்தில் தான் இவர்களை குடும்பத்தினர் சேர்த்துக் கொண்டனர். மணிமேகலை திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

மணிமேகலை சின்னத்திரை பயணம்:

தற்போது இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்களை கடந்து இருக்கிறது. அதன் பின்னர் இவர் விஜய் டிவியிலேயே செட்டில்ஆகி விட்டார் என்று சொல்லலாம். மேலும், இவர் Vjவாக இதுவரை 2400க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார், 2000க்கும் மேற்பட்ட லைவ் நிகழ்ச்சிகள், 120 க்கும் மேற்பட்ட பிரபலங்களின் பேட்டி, 250கும் மேற்பட்ட குழுவான நிகழ்ச்சிகள், 100க்கும் மேற்ப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்று 12 ஆண்டுகளில் செய்து இருக்கிறார். அதே போல இந்த தம்பதி யூடுயூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.

-விளம்பரம்-

யூடுயூப் சேனல்:

இந்த சேனலில் இவர்கள் புது புது வித்தியாசமான வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் இவர்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி அதற்கு HM லேண்ட் என பெயர் வைத்து வீடியோ ஒன்றையும் யூடியூப்பில் வெளியிட்டு இருந்தார்கள். பின் தாங்கள் வாங்கிய நிலத்தில் வீடு கட்டும் பணிக்காக போர் போட்டு தண்ணீர் எடுத்து இருந்தார்கள்.

manimegalai

ஹோம் டூர் வீடியோ:

இந்நிலையில் மணிமேகலை தன்னுடைய youtube சேனலில் ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதாவது, சில மாதங்களுக்கு முன்பு மணிமேகலை முதன் முதலாக வாங்கிய காஸ்ட்லி பைக் ஒன்று திருடு போனது. இதனால் இவர்கள் மனம் உடைந்து போய் இருந்தார்கள். பின் இவர்கள் வேறொரு வீட்டுக்கு மாறி இருக்கிறார்கள். தற்போது அந்த வீட்டை தான் மணிமேகலை தன்னுடைய கணவர் உசேனுடன் சேர்ந்து சுற்றிக் காட்டி இருக்கிறார்.

Advertisement