இதுவரை இப்படி ஒரு கடையை எந்த ஒரு பிரபலமும் திறப்புவிழா செய்தது இல்லை – பாராட்டு மழையில் மணிமேகலை.

0
706
manimegalai
- Advertisement -

கிராமத்தில் உள்ள மளிகை கடையை மணிமேகலை திறந்து வைத்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரல் ஆகி வருகிறது. சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக வேலை பார்த்து இருந்தவர் மணிமேகலை. அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இதனை தொடர்ந்து இவர் தனியார் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார். பின் இவர் மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார்.

-விளம்பரம்-

இதனால் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். ஆனால், இவர்கள் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதிக்கவில்லை. இதனால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

- Advertisement -

மேலும், இரண்டு குடும்பத்தினரின் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் தங்களின் வாழ்க்கை துவங்கிய உசேன் மற்றும் மணிமேகலை படிப்படியாக முன்னேறி இன்று சொந்தமாக நிலம், கார் என்று என்று வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவருமே திருமணத்திற்கு பின்னர் யூடியூப் சேனல் ஒன்றை துவங்கியிருந்தார்கள். அதில் இவர்கள் பதிவிடும் எதார்த்தமான வீடியோக்கள் பார்வையாளர்களை கவர, இவர்களது யூடியூப் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

யூடியூப் மூலமே இவர்களுக்கு மாதம் பல லட்சம் வருமானம் கிடைத்தது. அதோடு சின்னத்திரையில் பல ஆண்டுகளாக காணாமல் போன மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் தான் இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடித்தார். மூன்று சீசன்களாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக மணிமேகலை இருந்தார். பின் நான்காவது சீசன் தொடங்கும் போது இவர் நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார்.

-விளம்பரம்-

இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. தற்போது இவர்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் மணிமேகலை தன்னுடைய கணவருடன் சேர்ந்து செய்திருக்கும் கலாட்டா வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு கிராமத்தில் மணிமகலை தன் நண்பர்களுடன் சேர்ந்து பயங்கரமாக கலாட்டா செய்து இருக்கிறார்.

அதோடு அந்த கிராமத்தில் உள்ளது தன் நண்பரின் கடையை திறந்து வைப்பது மாதிரி எல்லாம் சேட்டை செய்திருக்கிறார், தற்போது இந்த வீடியோவை தான் இவர் youtube இல் பதிவிட்டு இருக்கிறார். இதனை கண்ட பலரும் மணிகலையை பாராட்டி வருகின்றனர். பொதுவாக பிரபலங்கள் பெரிய பெரிய கடைகளை தான் திறந்து வைக்க செல்வார்கள். ஆனால், இப்படி கிராமத்து கடையை திறந்து வைத்த முதல் பிரபலம் நீங்கள் தான் என்று மணிமேகலையை பாராட்டி வருகின்றனர்.

Advertisement