பிரியங்கா கற்பமாக இருங்கங்களா…இதை கேள்விப்பட்டு அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியாகி உள்ளனர் !

0
3769
priyanka1
- Advertisement -

`காமெடி இஸ் எ சீரியஸ் பிசினஸ்’ என்று சொல்லுவார்கள். அந்த காமெடியால் ஒருத்தரை கலாய்த்தும் சிரிக்க வைக்கலாம்; கலாய் வாங்கியும் சிரிக்க வைக்கலாம். இந்த இரண்டாவது கேட்டகிரிக்குப் பொருத்தமானவர் தொகுப்பாளினி பிரியங்கா. எவ்வளவு கலாய்த்தாலும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், காமெடியாகவே நிகழ்ச்சியைக் கொண்டு செல்வது பிரியங்கா ஸ்டைல். செம பிஸியாக இருந்தவரை சில கேள்விகளோடு தொடர்புகொண்டோம்.

-விளம்பரம்-

vj priyanka

- Advertisement -

“ `சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் முதல் சிறப்பு விருந்தினர்கள் வரை எல்லாரும் உங்களை கலாய்க்கிறாங்களே..?”

“என்னைப் பொறுத்தவரை ‘சூப்பர் சிங்கர்’ என்னோட குடும்பம். நம்ம ஃபேமிலி ஆட்களை நாம கலாய்ச்சிக்கிறது இல்லையா. அந்த மாதிரிதான் போட்டியாளர்கள், நடுவர்கள் எல்லாரும் உரிமையோட கலாய்க்கிறாங்க. ஆனால், வேற யாராவது என்னை கலாய்ச்சா முதல்ல கோபப்படுறதும் அவங்கதான். அதே மாதிரி எங்க குடும்பத்துக்கு வர விருந்தினர்களும், எங்க வீட்டை அவங்க வீடு மாதிரி நினைச்சுக்கணும்னு கம்ஃபர்டபிளா வெச்சிக்க நினைப்பேன். அதுனாலதான் அவங்களுக்கும் என்னை கலாய்க்கிறதுக்கு ஒரு ஸ்பேஸ் கொடுக்கிறேன். அப்படி நாம ஜாலியா இருக்கும்போது என்னோட வேலையும் சரியா நடக்கும்; அவங்களும் ஃபீரியா ஃபீல் பண்ணுவாங்க.’’

-விளம்பரம்-

“போட்டியாளர்கள் உங்க பக்கத்துல நின்னா உண்மையாகவே டேஞ்ஜர் ஜோனுக்கு போயிடுவாங்களா..!?”

“அது என்னமோ தெரியலை, ஒரு சில நாள்களில் அப்படி நடந்திருக்கு. சில சமயம் யதார்த்தமா நடந்ததனால இதை டைரக்டர் நோட் பண்ணி, அடுத்தடுத்து அதே மாதிரி போட்டியாளர்களை என் பக்கத்துல நிக்க வெச்சு பண்ணியிருப்பாங்க. என் பக்கத்துல நின்னா டேஞ்ஜர் ஜோன்னா, முதலில் என் புருஷனுக்குத்தான் டேஞ்ஜர் ஜோனா இருந்திருக்கும். ஏன்னா, அவர்தான் அதிகமா என் பக்கத்துலேயே இருக்கார்.’’“நீண்ட நாள்கள் கழிச்சு சிம்பு ஒரு ரியாலிட்டி ஷோவுக்கு வந்தார்… அந்த ஷோவுக்கு நீங்கதான் தொகுப்பாளினி… எப்படி இருந்துச்சு அந்த அனுபவம்..!?”

“நிறைய முறை சிம்புவை தூரத்தில் நின்னு பார்த்திருக்கிறேன். ’சூப்பர் சிங்கர்’ ஷோவில்தான் முதல் முறை பக்கத்தில் நின்னு பார்க்கவும், பேசவும் வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப வருஷம் கழிச்சி ஒரு ஷோவுக்கு வரார்; எதிர்பார்ப்புகள் அதிகமா இருக்கும். அவருக்கு எப்படி இண்ட்ரோ கொடுக்கிறதுனு ரெண்டு நாளா யோசிச்சிட்டு இருந்தேன். சிம்புவுக்கு வெளியில வேற மாதிரி ஒரு பிம்பம் இருக்கு. ஆனால், அவர் பக்கத்துல போய்ப் பழகிப் பார்த்தால் அவர் எவ்வளவு ஃபன்னான ஆள்னு தெரியும்.

ஷோ ஸ்டார்ட் ஆகுறதுக்கு முன்னாடியே என்னையும் மா.கா.பா.வையும் கூப்பிட்டு, ’என்ன ப்ளான் பண்ணியிருக்கீங்க; என்னென்ன கேள்விகள் கேட்கப்போறீங்க’னு கேட்டார். அப்பறம், ’எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நீங்க எப்படி நினைக்கிறீங்களோ அப்படியே பண்ணலாம்’னு சொன்னார். பல சர்ச்சைகள் ஒருத்தரை சுத்தியிருக்கும்போது இதை கேட்கவேண்டாம், அதை கேட்காதீங்கனுதான் சொல்லுவாங்க. ஆனால், சிம்பு இப்படி சொன்னதே எங்களுக்கு முதல் ஷாக்.

அப்பறம், அவர் பாட்டு பாடினதை, டான்ஸ் ஆடியதை, எமோஷனலாய் பேசினதை, சர்ச்சையான விஷயங்களுக்கு கெத்தா பதில் சொன்னதை எல்லாம் நேரில் பார்த்தது நல்ல அனுபவமா இருந்துச்சு. அதுமட்டுமில்லாமல், அவர் ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிக்கும் ஃபேன். ஒரு முறை எங்க செட்டுக்கு ஓவியா வந்தப்போ சிம்புவுக்கு போன் பண்ணினோம். அப்போ அவர் என்னை மாதிரியே சிரித்துக்காட்டினார். நான் அவருக்கு ஃபேன். அவர் மாதிரி நான் பண்ணலாம். ஆனால், அவர் என்னை மாதிரி பண்ணிக்காட்டினதும் எனக்கு செம ஷாக். உண்மையாகவே சிம்பு வேற லெவல்.’’

“ ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியோட மூணு சீசன், ’கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ்’ல ஒரு சீசன்னு சீனியர், ஜூனியர் ரெண்டு டீமோடும் ட்ராவல் பண்ணியிருக்கீங்க. எது உங்களுக்கு பர்ஷனலா ரொம்ப கனெக்ட்டான ஷோ எது..?

’’ ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் நான் அதிகமா கத்துக்கிறேன். ஏன்னா, நான் வீஜே-யிங் பண்றேன்; அதுக்கு காமெடியா பேசணும்; அங்கங்க சில கவுன்ட்டர்ஸ் கொடுக்கணும். இப்படி பல விஷயங்களை நான் சீனியர்ஸ்கிட்ட இருந்து கத்துக்கிறேன். ஆனால், எனக்கு பர்ஷனலா ரொம்ப கனெக்ட்டான ஷோ, கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ்தான். அந்தப் பசங்களுக்கு என்னை ஒரு அக்காவா, ஒரு அம்மாவா ஃபீல் பண்ணிப்பேன். ஏன்னா, அந்த குழந்தைகள் எல்லாரும் என்கூட ரொம்ப க்ளோஸா இருப்பாங்க. நானும் அவங்களோட ரொம்ப அட்டாச்சுடா இருப்பேன்.’’

“நீங்க கர்ப்பமாக இருக்கீங்கன்னும் அதுனால சின்னத்திரையை விட்டுப் போறதாகவும் சொல்லிட்டு இருக்காங்க… அதுக்கெல்லாம் உங்களோட ரியாக்‌ஷன் என்ன..?”

“நானும் அந்தச் செய்திகளை எல்லாம் பார்த்தேன். அதுக்கான பதிலை ஷோலேயே சொன்னோம். எங்க ஷோல வழக்கமா ஒரு பாம்பு டான்ஸ் ஆடுவோம். ஒரு நாள் லன்ச் முடிச்சுட்டு ஷூட் போகும்போது, அந்த டான்ஸை ஆடச்சொன்னாங்க. ஃபுல்லா சாப்பிட்டதனால என்னால சரியா ஆட முடியாம, கொஞ்சம் பார்த்து, பார்த்து மெதுவா ஆடுனேன். அதை மா.கா.பா, ‘என்ன இது கர்ப்பமான பாம்பு ஆடுற மாதிரி இருக்கு’னு கலாய்ச்சார். அந்த லன்ச் தொப்பையை கர்ப்பம்னு நினைச்சுக்கிட்டு, பிரியங்கா கர்ப்பமா இருக்காங்கனு வீடியோ போட்டுடாங்க. அந்த வீடியோவைப் பார்த்து சில பேர், `எனக்கு வாழ்த்துச் சொல்லி எத்தனை மாசம்’னு கேட்டாங்க.

என் கணவர்கிட்டேயும் இதையே கேட்டிருக்காங்க. அவரு ஷாக்காகி எனக்குப் போன் பண்ணி, ‘என்ன எல்லாரும் இப்படி சொல்றாங்க’னு எனக்கு போன் பண்ணி கேட்டார். இப்படி அவங்க போடுற வீடியோ என்னையும் குடும்பத்தையும் பாதிக்கிது. அந்த வீடியோவைப் பார்த்து என் மாமனாருக்கெல்லாம் போன் பண்ணி கேட்டிருக்காங்க. நான் மீடியாவுல இருக்கேன்; என்னைப் பத்தி பேசுறீங்க. அதெல்லாம் ஓகே. ஆனால், அது என் குடும்பத்தையும் பாதிக்கிதுனு நினைக்கும்போது கஷ்டமா இருக்கு. இதை எப்படி எதுக்கிறதுனு தெரியலை.’’

Advertisement