என்னை தவிர யாரும் அப்படி நடிச்சிருக்க மாட்டாங்க. பூரித்து போய் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ். வீடியோ இதோ.

By Rajkumar · 29/1/2020

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் திரைப்பட நடிகை, நடன கலைஞர், தொகுப்பாளினி பல துறைகளில் பங்காற்றி வருகிறார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து உள்ளார்.சமீபத்தில் வந்த கனா படம் கூட இவருக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தந்தது.

காக்க முட்டை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா, ராஜேஷ் தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்க முட்டை படத்தில் நடித்து அந்த படத்திற்காக சிறந்த நடிகை என்ற விருதையும் பெற்றார். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் சரத் குமார், ராதிகா,விக்ரம் பிரபு நடித்துள்ள 'வானம் கொட்டட்டும்' என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும், இதில் ராதிகா சரத்குமாரும் கலந்து கொண்டார்.

இதையும் பாருங்க : லிப் லாக்னு சொன்னீங்க, ஹீரோ என்ன இப்படி செய்றார். இயக்குனரிடம் புலம்பிய நாயகி.

இந்த பேட்டியின் போது பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத் குமார் அவர்களின் பல படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன்.சாவித்ரி அம்மாவிற்கு பின்னர் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த முதல் நடிகை அவங்க தான். இப்போ அந்த பெருமையை நான் எடுத்துக்கொண்டு உள்ளேன். சாவித்ரா அம்மா, ராதிகா மேடம்க்கு பிறகு இப்போ நான் தான் தங்கச்சி கதாபத்திரம் பன்றேன். காக்கை முட்டை படத்தில் நான் நடிக்கும் போது எனக்கு 22 வயசு தான். ஆனால், என்னை தவிர வேறு எந்த நடிகையாவது அந்த வயதில் நடித்திருப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை.

வீடியோவில் 3:30 நிமிடத்திற்கு மேல் பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=vdT-qE_JoqU&feature=youtu.be

ஆனால், காக்க முட்டை படத்திற்க்கு பின்னர் நிறைய ஹீரோயின்கள் செய்தார்கள். அது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. எனக்கு மஞ்சுமா எனக்கு நல்ல தோழி, ஒரு நாள் எனக்கு அவர் போன் செய்து நான் விஜய் சேதுபதிக்கு தங்கையாக நடிக்கிறேன். நான் இதை செய்வதற்கு நீ தான் காரணம் என்று சொன்னார் என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ் 'வானம் கொட்டட்டும்' படத்திலும் விக்ரம் பிரபுவின் தங்கையாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full