இந்த படத்தில் நடித்த போது எனக்கு 13 வயசு தான் – ஷாக் கொடுத்த சிம்பு பட நடிகை. (19 ஆண்டு ஆச்சி அந்த படம் வெளியாகி)

0
9673
simbu
- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரண்ட்ஸ் படத்தில் நடித்த அபிநயா பேட்டி ஒன்றில் பேசிய போது பிரண்ட்ஸ் படத்தில் தான் நடித்த போது தனக்கு 13 வயது தான் என்று கூறி இருந்தார். இது குறித்து சமீபத்தில் இவர் பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர் கூறியது, பிரண்ட்ஸ் படத்தில் நடிக்கும் போது எனக்கு 13 வயது தான் ஆனது. அதனால் என்னுடைய அம்மா அனுராதா அவர்கள் படத்தில் நடிக்க கூடாது என்று தடுத்தார்கள். நான் அடம் பிடித்து தான் விஜயுடன் பிரண்ட்ஸ் படத்தில் நடித்தேன்.

-விளம்பரம்-

நான் வயதிற்கு வந்த 4, 5 மாதத்திலேயே அந்த படத்தில் நான் நடித்திருந்தேன் பலரும் நான் மிகவும் பெரிய பெண் என்றுதான் நினைத்தார்கள் அவர்களுக்கு எல்லாம் நான் மிகவும் சின்ன பெண் என்பதை சொல்ல விரும்பினேன் என்று கூறியுள்ளார் அபிநயா. பிரண்ட்ஸ் படத்திற்கு பின்னர் இவர் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து இருந்தார். மேலும், இவர் பல படங்களுக்கு நடன இயக்குநரககவும் பணியாற்றி இருக்கிறார்.

- Advertisement -

அபிநயாவை தொடர்ந்து தற்போது சிம்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சார்மியும், தான் நடித்த முதல் படத்தின் போது தன்னுடைய வயது என்ன என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார். நடிகை சார்மி கவுர் 1987ஆம் ஆண்டு மும்பையில் மஹாராஷ்டிராவில் பிறந்தவர்.2002 ஆம் ஆண்டு நீ தோடு காவாலி என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

அந்த படத்திற்க்கு பின்னர் தான் இவர் சிம்பு நடித்த காதல் அழிவதில்லை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். இப்படி ஒரு நிலையில் இவர் சினிமாவில் அறிமுகமான ‘நீ தோடு காவாலி’ படம்வெளியாகி 19 ஆண்டுகள் ஆனதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சார்மி இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு 13 வயதுதான் ஆனது என்று கூறி இருக்கிறார் இந்த படம் 2002ஆம் ஆண்டு வெளியானது இதே ஆண்டு தான் காதல் அழிவதில்லை படமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement