யாஷிகா அம்மாவுக்கு மஹத்தை கொஞ்சம் கூட பிடிக்காது.! யாஷிகா நண்பன் அதிரடி.!

0
180
Mahat

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத் வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவர் யாஷிகா மீது வைத்திருந்த கண்மூடி தனமான காதல் தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். மஹத் வேறு ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்று தெரிந்தும் யாஷிகா, மஹத்தை காதலித்து அனைவர் மத்தியிலும் யாஷிகா மீது ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது.

mahat

யாஷிகா மற்றும் மஹத்திற்கு இடையான காதல் குறித்து பலரும் பல விதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். எனவே, யாஷிகா உண்மையில் எப்படிபட்ட குணமுடையவர், அவர் உண்மையில் மஹத்தை காதலிக்கிறாரா என்ற கேள்விகளுக்கு விடையளிக்க அவர்களது நண்பர் நிரூப் என்பவரிடம் பேட்டி எடுக்கப்பட்டுள்ளது.

அந்த பேட்டியின் போது மஹத் மற்றும் யாஷிகா இருவரும் வெளியே வந்தும் அவர்களது காதலை தொடர்ந்தால் உங்களுடைய ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதுகுறித்து யாஷிகாவின் நண்பர் நிரூப் கூறியபோது, கண்டிப்பாக அதனை ஒப்புக்கொள்ள மாட்டேன். நான் இல்லை யாஷிகாவின் பெற்றோர்களே அதனை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

yashika

யாஷிகாவின் பெற்றோர்களுக்கு மஹத்தை சுத்தமாக பிடிக்காது. மஹத் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டதும் அவர்களுக்கு பிடிக்காது, அது எனக்கும் பிடிக்காது. ஒருவேளை மூன்றாம் மனிதர் அவர்களது உறவை பார்த்தாலும் கண்டிப்பாக அவர்கள் இருவருக்கும் உண்டான காதலை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.