பாசமுள்ள மனிரதப்பா நான் மீச வச்ச குழந்தையப்பானு போது வரும் இந்த குழந்தை இந்த பிரபல சீரியல் நடிகை தான்.

By Rajkumar · 30/8/2021

சினிமாவைப்பொறுத்தவரை எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் தற்போது நடிகைகளாகஜொலித்து வருகிறார்கள். அதில் ஒரு சிலர் தற்போது சீரியலில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான 'படையப்பா' படத்தில் இடம்பெற்ற 'என் பேரு படையப்பா' பாடலில் பாசமுள்ள மனிதரப்பா, நான் மீச வச்ச கொழந்தையப்பா என்ற வரி வரும் போது ஒரு குழந்தையின் முகம் வந்து போகும், அது வேறு யாரும் இல்லை சீரியல் நடிகை சஹானா தான்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த தொடர் தான் இதயத்தை திருடாதே. இந்த தொடரில் புதுமுக நடிகையாக சஹானா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ஹிமா பிந்து.இவருக்கு ஜோடியாக சிவா என்ற கதாபாத்திரத்தில் நவீன்குமார் நடிக்கின்றார். இந்த தொடர் கலர்ஸ் மராத்தி தொடரான ஜிவ் ஜலா ஏடே பிசா என்ற தொடரின் தழுவல்.

இதையும் பாருங்க : ஸ்நாக்ஸ் சாப்பிடும் இடமா அது? நீச்சல் உடையில் மல்லாக்கா படுத்திருக்கும் பிரியங்காவிடம் கணவர் செய்த வேலை.

இந்த தொடர் அரசியல் ரீதியாக போட்டி போடும் இரு அரசியல்வாதிகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட சிவா மற்றும் சஹானா இருவரின் காதல் கதை. இந்த தொடர் ஒளிபரப்பான சில மாதத்திலேயே கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மேலும், இந்த தொடர் ஒளிபரப்பான சில நாள்களிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர்களின் நடிப்பில் முதல் சீசன் நிறைவடைந்தை தொடர்ந்து, ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 2 ஆவது பாகமும் தற்போது ஒளிப்பரப்பட்டு வருகிறது. இவரின் சொந்த ஊர் ஆந்திரா. இவரின் மொத்த குடும்பமும் கலைக் குடும்பம் தான். ஆரம்ப கால சினிமாவிலிருந்தே இவரின் தாத்தா, குடும்பத்தில் இருக்கும் பலரும் நடித்து வருகின்றனர். அதனால் தான் என்னவோ இவருக்கும் சிறு வயதில் இருந்தே சினிமா மீது ஆசை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full