இப்படியே இருந்தா உன்ன விஜய்க்கு அம்மாவா நடிக்க தான் கூப்பிடுவாங்க -இயக்குனர் பாய்ச்சல்

0
5029
- Advertisement -

இந்த தீபாவளிக்கு திரையில் வெளியாகி சக்கை போடு போட்டு ₹250 கோடி வசூல் செய்த படம் மெர்சல். இந்த படத்தில் தளபதிக்கு காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் என இரண்டு ஹீரோயின்கள். படத்தில் காஜலுக்கு பெரியதாக நடிப்பு இல்லை என்றாலும், நித்யா மேனனுக்கு ஒரு நல்ல கதாப்பாத்திரம் அமைந்திருக்கும். அதில் தனது வழக்கமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருப்பார் நித்யாமேனன்.

-விளம்பரம்-

அதுவரை பல மொழிப் படங்களில் கொடிகட்டிப் பறந்த நித்யாவிற்கு தற்போது கடந்த 6 மாதமாக பட வாய்ப்புக்கள் சுத்தமாக இல்லையாம். இதனால் கடுப்பான நித்யா, தனது நண்பர் மற்றும் இயக்குனர் நடனபுயல் பிரபுதேவாவிடம் போன் செய்து, எனக்கென்ன அழகில்லையா? திறமையில்லையா? ஏன் எனக்கு யாரும் தற்போது நடிக்க வாய்ப்பு தருவதில்லை என கடிந்து கொண்டாராம். இதற்கு முன்னர் உறுமி படத்தில் பிரபுதேவா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதனை கேட்ட, பிரபுதேவா
உன்னிடம் அனைத்தும் இருக்கிறது, அதனுடன் சேர்ந்து, கோணி மூட்டை மாதிரி உடம்பும் இருக்கிறது. எனக் கூறி கலாய்த்து விட்டாராம். அதன் பின்னர், இந்த உடம்பினை சற்று குறைத்துவிட்டு வா, அதன் பின்னர் உனக்கு பட வாய்ப்புகள் கொட்டும். அதற்கு நான் கேரண்டி. என அறிவுரை கூறியுள்ளார்.


இதனால்,தற்போது எப்படியாவது உடம்பினை குறைத்துவிட வேண்டும் எனக் கூறி அதில் ஸ்பெஷலிஸ்டான தனது தோழி அனுஸ்காவை நாடியுள்ளாராம். ஆனால், அவரே இஞ்சி இடுப்பழகி படத்திற்கு தான் ஏற்றிய உடம்பினை குறைக்க கேரளாவில் முகாமிட்டுள்ளார் என்பது ஒரு செய்தி. இதனால் என்ன செய்வது என முழித்து வருகிறார் நித்யா.

-விளம்பரம்-
Advertisement