எந்த காம்போசரும் செய்ய முடியாதத செஞ்சிகிட்டு இருக்கேன், எனக்கு தாண்டா கர்வம் வரணும் - இளையரஜா பேட்டி

By subhashini · 2/2/2025

தன்னை குறித்த விமர்சனங்களுக்கு இசைஞானி இளையராஜா கொடுத்து இருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. இவர் 70 காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசைத்து வருகிறார். இவருடைய இசையை ரசிக்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் 1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இவர் இசையமைப்பாளர், பாடகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இவர் பாடல் வரிகளை எழுதுபவர் என்று பலருக்கும் தெரியாத ஒன்று.

இளையராஜா திரைப்பயணம் :

இவர் கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றவர். இது ஒரு பக்கம் இருக்க இளையராஜா குறித்து சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் நாளுக்கு நாள் அதிகமாகி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் இளையராஜா, என்னுடைய இசையின் உடைய பிரம்மாண்டத்தை பார்த்து இவர் ஒரு மனிதராக இதை செய்திருக்க வாய்ப்பில்லை. நிச்சயமாக இவருக்குள் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். அது என்னுடைய முயற்சியில் வந்ததில்லை. நான் ஒரு ட்யூனில் உங்களை கட்டி போட வேண்டும் என்று நினைத்து நான் கம்போஸ் செய்யவில்லை.

இளையராஜா பேட்டி:

ஹார்மோனியம் பெட்டி முன்னாடி போனாலே மனதில் தோன்றுவதை இசையாக கொடுக்கிறேன். கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணினுடைய வயிற்றில் உள்ள குழந்தை உணர்ச்சியே இல்லாமல் இருந்தது. ஆப்ரேஷன் தியேட்டரில் டாக்டர்களுக்கு என்ன செய்வதென்று புரியாமல் தயங்கினார்கள். உடனே அந்த தாய், எனக்கு திருவாசகம் இசையை போடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். அந்த இசை போடப்பட்டதுமே அந்த குழந்தை அசைந்தது. அதேபோல் கேரளாவில் ஒரு யானை மதம் பிடிக்கும் அளவிற்கு ஆர்ப்பாட்டம் செய்தது. என்னுடைய பாடலைக் கேட்டவுடன் அந்த யானை தூங்கி விட்டது. ஒரு தாலாட்டு போல என்னுடைய இசை இருந்தது.

https://www.youtube.com/watch?v=ZEjnWFODAZ4

யானை செய்த அதிசயம்:

இன்னொரு இடத்தில் டூரிங் தியேட்டரில் ராசாத்தி உன்ன என்ற பாடல் ஒலித்தது. அந்த பாடலைக் கேட்க யானை கூட்டம் எந்த பயிரையுமே சேதம் செய்யாமல் வந்து சென்றது. ஒரு வாரமாக அந்த பாடல் டூரிங் தியேட்டரில் ஒலித்தது. இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் அப்பாற்பட்ட சக்தியால் தான் நிச்சயம் நடக்கும். இதையெல்லாம் நான் சொன்னால் எனக்கு தலைகனம், திமிர் பிடித்தவன் என்றெல்லாம் சொல்கிறார்கள். எனக்கு திமிர் வராமல் வேறு யாருக்கும் திமிரு வரும். எனக்கு தான் கர்வம் வரவேண்டும். எனக்கு தான் திமிர் அதிகமாக இருக்க வேண்டும். காரணம், உலகத்தில் யாரும் செய்யாததை நான் செய்திருக்கிறேன்.

சர்ச்சைகளுக்கு பதிலடி:

எனக்கு திமிர் இல்லாமல் எப்படி இருக்கும்? இதையெல்லாம் நினைக்கும் போது எனக்கு திமிர் வருமா? வராதா? ஆனால், எனக்கு திமிர் கிடையாது. எனக்கு திமிர் இருக்கிறது என்று ஒருவன் சொல்கிறானே அவனுக்கு தான் எவ்வளவு திமிர் இருக்கும். நான் என்னுடைய வேலையை ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறேன். கர்வம் எப்போது வரும் தெரியுமா? ஒரு வேலையை நன்றாக செய்தால் கர்வம் வரும். என்னை குற்றம் சாட்டுபவர்கள் எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு என்னை கர்வம் பிடித்தவன் என்று சொன்னால், நிச்சயம் எனக்கு கர்வம் இருக்கத்தான் செய்யும். விஷயம் இருக்கிறவனிடம் கர்வம் இருக்காதா? என்று கூறி இருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full