'தாங்கள் நன்றகா இசை அமைத்தாலும் தற்பெருமை அதிகம் - ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த இளையராஜாவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்.

By subhashini · 21/6/2022

ரசிகர்களின் கேள்விக்கு இளையராஜா அளித்து இருக்கும் பதில் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசையின் ஜாம்பவனாக பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருபவர் இளையராஜா. இவர் இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளை இருக்கிறார். இவருடைய இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம். ஏன்னா, அந்த அளவிற்கு தன்னுடைய இசையால் எல்லோரையும் கட்டிபோட்டவர். 1976 ஆம் ஆண்டு இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். இவர் இசையமைப்பாளர், பாடகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இவர் பாடல் வரிகளை எழுதுபவர் என்று பலருக்கும் தெரியாத ஒன்று.

இதையும் பாருங்க : ஆண்டவரே இல்லை என்று சொல்லும் ஆண்டவருக்கு கோவில் கட்டும் ரசிகர்கள், அதுவும் எங்க தெரியுமா? கமலின் ரியாக்ஷன் என்ன?

இளையராஜா வாங்கிய விருது:

மேலும், இவர் கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றவர். இதனால் இவருக்கு இந்திய அரசின் படத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் இவருக்கு பத்ம விபூஷண், தேசிய விருது என பல விருதுகளை பெற்று இருக்கிறார். சமீபத்தில் இவர் புத்தக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அந்த நிகழ்ச்சியில் மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகம் வெளியாகி இருந்தது.

https://twitter.com/chellsrini/status/1539167262396928000

மோடி குறித்து இளையராஜா சொன்னது:

இந்த புத்தகத்திற்கு முன்னுரையை இளையராஜா எழுதி இருந்தார். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இளையராஜா மோடியும், அம்பேத்காரையும் ஒப்பிட்டு பேசி இருந்தார். இளையராஜாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இந்த ஒப்பீட்டுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து இருந்தது. இருந்தாலும் இளையராஜா தன் இசை பணியை செய்து கொண்டு வருகிறார். சமீபத்தில் வெளிவந்த அக்கா குருவி படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். இந்நிலையில் ரசிகர்கள் கேள்விக்கு இளையராஜா அளித்து இருக்கும் பதில் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் உடன் இளையராஜா உரையாடல்:

அதாவது, இளையராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் பதிலளித்திருந்தார். அதில் ரசிகர் ஒருவர், கண்ணே கலைமானே பாடலை கண்களை மூடி கேட்கும்போது காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன் என்ற வரிகளின் போது என்னை அறியாமலேயே கண்ணீர் வந்துவிடுகிறது. இதற்காக இளையராஜா இசையின் கடவுள் என்று கூறுகிறார்கள் என்று கூறியிருந்தார். அதற்கு இளையராஜா, அந்த பாடலை நான் வெகு சீக்கிரமாகவே கம்போஸ் செய்து முடித்துவிட்டேன். அதன் இயற்கையான ஃப்லோ நேரடியாக இதயத்திற்குள் நுழையும் தன்மை வாய்ந்தது. அதனால் மக்கள் அந்தப் பாடல்களை கேட்கும்போது கண்ணீர் வந்துவிடுகிறது என்று கூறி இருந்தார்.

https://twitter.com/forkrishh/status/1539131716333600768

இளையராஜா அளித்த பதில்:

இன்னொரு ரசிகர், கொஞ்சம் மழைனா போதும் மெட்ராஸ் மக்களுக்கு உடனே ஆனியர் பக்கோடா, சாய், ராஜா சார். நானும் மெட்ராஸ்காரன் தான் என்று பதிவிட்டிருக்கிறார். அதற்கு இளையராஜா, ஏதாவது ஒரு சம்பவம் உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்தால், அப்போது என் பாடல் உங்களுக்கு நியாபகம் வரும் அல்லது எதாவது ஒரு பாட்டு நியாபகம் வந்தால் உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவம் அந்தப் பாடலுடன் கனெக்ட் ஆகும். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு வேற வழி இல்லை என்று கூறி இருக்கிறார்.

https://twitter.com/DhashnamurthiG/status/1539135905780334595

ரசிகர்களின் கமன்ட் :

இப்படி இளையராஜா தனது ரசிகர்களிடம் கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதே போல ராஜாவின் பேச்சில் தலைகனம் தான் அதிகம் இருக்கிறது என்று பலர் கமன்ட் செய்து வருகின்றனர். அதில் ஒருவர் 'தாங்கள் நன்றகா இசை அமைத்தாலும் தற்பெருமை அதிகம்.ஒரு பாடல் உருவகா பாடல் எழுதியவர்க்கு அதிக உரிமை இருக்கு. இசை அமைத்ததற்கு பணம் வாங்கி விடுகிறீர்கள். தயாரிப்பாளர் தான் அதற்கு உரிமையானவர். SPB அவர்களை உங்கள் பாடல் பாடக்கூடாது என்று அவர் மனதை நோக அடிதுவிட்டிர்கள் வெறுக்கத்தக்க விசயம்' என்று பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full