ஆண்டவரே இல்லை என்று சொல்லும் ஆண்டவருக்கு கோவில் கட்டும் ரசிகர்கள், அதுவும் எங்க தெரியுமா? கமலின் ரியாக்ஷன் என்ன?

0
231
- Advertisement -

ரசிகர்கள் கமலுக்கு கோயில் கட்டி வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் 1970 களிலேயே சினிமாவில் நடிக்கத் துவங்கி தற்போது இந்திய அளவில் மிக பிரபலமான நடிகராக வளர்ந்திருக்கிறார் கமல். இரண்டு வயதிலேயே சினிமாவுக்குள் வந்த கமல் 60 ஆண்டுகளாக சினிமா துறையில் நடித்திருக்கிறார். மேலும், இந்திய அளவில் ஐந்து மொழிகளில் நடித்து ஐந்து மொழிகளிலும் பிலிம்பேர் விருது வாங்கிய ஒரே நடிகர் கமல்.

-விளம்பரம்-
வ' வரிசையில் கமல் நடித்த படங்கள்!

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். இயக்குனர் பாலச்சந்திரனால் நாயகனாக அறிமுகப் படுத்தப்பட்ட கமல் இன்று இந்தியாவில் உள்ள சிறந்த இயக்குனர்களுடன் பணியாற்றி வருகிறார். இவர் இதுவரை நான்கு தேசிய விருது நடிப்புக்காக பெற்றிருக்கிறார், தயாரிப்பாளராக ஒரு தேசிய விருதும், 19 பிலிம்பேர் விருதும், தமிழக அரசு விருது, நந்தி விருது, அதுமட்டுமில்லாமல் உயரிய பல விருதுகளை வென்றிருக்கிறார்.

- Advertisement -

கமல் பற்றிய தகவல்:

இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடன இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என அனைத்து துறைகளிலுமே சிறந்து விளங்குகிறார். இவருடைய பல படங்கள் ஆஸ்கர் விருதுக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது. மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படம் வெளியாகி இருக்கிறது .

Vikram Trailer Kamal Lokesh Kanagaraj | விக்ரம் ட்ரைலர்

விக்ரம் படம்:

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து ராஜ்கமல் ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருக்கிறார்கள். மேலும், இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது.

-விளம்பரம்-
Actor Kamal Vikram Story Leaked| கமல் விக்ரம் படம்

கமலுக்காக ரசிகர்கள் செய்தது:

அதோடு சில ஆண்டுகளாகவே மிகப்பெரிய வெற்றிக்காக காத்திருந்த கமல் இந்த படத்தின் மூலம் தமிழில் வெளியாகி வசூல் எடுத்த அனைத்து படங்களின் வசூலையும் மூன்று வாரங்களில் முறியடித்து முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் கமலுக்கு கோயில் கட்டி வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, கமல் அவர்கள் மிகவும் நார்த்திகவாதி. ஆனால், இவருடைய ரசிகர்கள் கோவில் கட்டி வருகிறார்கள். கடவுளே இல்லை என்று கூறும் நடிகர் கமலுக்கு ரசிகர்கள் கோவில் கட்டுவது மிகவும் ஆச்சரியப்படுத்தும் விஷயம்.

கமலுக்கு கட்டப்படும் கோவில்:

ஆனால், இந்த கோவில் தமிழகத்தில் கட்டப்பட வில்லை. இந்த கோவில் மேற்குவங்காள மாநிலம், கிதிப்பூர் என்னும் இடத்தில் கட்டப்பட்டு வருகிறது. ஆயுதபூஜை தினங்களில் இந்த கோவில் கட்டி முடிக்கப்படும் என்றும் அதற்காக நடிகர் கமலுக்கு விழா அழைப்பிதழ் அனுப்பப்பட உள்ளதாக ரசிகர் மன்றம் சார்பில் தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு கமல் என்ன சொல்லப் போகிறார்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அது மட்டுமில்லாமல் ஏற்கனவே நடிகர் அமிதாப்பச்சனுக்கு கோவில் கட்டி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement