பாரதியார் சொன்னது தவறு என்று நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜா கூறியிருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையில் ஐஐடி வளாகத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒன்பதாவது சர்வதேச இசை மற்றும் கலாச்சார மாநாடு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்திருக்கிறது. இந்த மாநாடு வருகிற 26-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் திரிபுரா மாநில ஆளுநர் இந்திரசேனா ரெட்டிநல்லு மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து இருக்கிறார்கள்.

மேலும், இந்த விழாவில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாக சென்னை ஐஐடி மற்றும் இளையராஜா மியூசிக் மற்றும் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியோர் இடையே கையெழுத்து போடப்பட்டிருக்கிறது. அதற்கான அடிக்கல்லும் போட்டு இருக்கிறார்கள். இதை அடுத்து நிகழ்ச்சியில் இளையராஜா, எனக்கு இசை தெரியாது. இதை நான் கற்றுக்கொள்வதற்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்தேன்.

Advertisement

விழாவில் இளையராஜா பேசியது:

இப்போது வரைக்கும் நான் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். நான் கற்றுக் கொண்டேனா என்று கேட்டால், நிஜமாகவே நான் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. கற்றுக் கொள்வதற்காக வந்த நான் இப்போதும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கணும் என்று தான் இந்த சென்டர் ஆரம்பித்து இருக்கிறார்கள். நான் பிறந்த ஊரில் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் கற்றுக் கொடுக்க ஆளில்லை.

இசை குறித்து சொன்னது:

ஒருவருக்கு தண்ணீர் கொடுக்காமல் தாகத்தை உண்டு பண்ணினால் அவன் கண்டிப்பாக தண்ணீரை கண்டுபிடித்து விடுவான். எந்த வேலையாக இருந்தாலும் சரி, ஒரு தாகம் ஏற்பட்டு விட்டால் நெருப்பு மாதிரி முயற்சி செய்தால் எந்த இடத்தையும் அடையலாம். அப்படி அடைந்தாலும் அந்த இடம் ஒரு பெரிய விஷயமாக தெரியாது. எல்லோருமே நான் சாதித்து விட்டேன் என்று சொல்கிறார்கள். எனக்கு ஒன்னும் அப்படி தெரியவில்லை.

Advertisement

பாரதியார் குறித்து சொன்னது:

கிராமத்திலிருந்து எப்படி வந்தேனோ அதே போல் தான் இப்பவும் நான் இருப்பதாக உணருகிறேன். இந்த நிர்வாகத்தில் இருந்து 200 இளையராஜா வரணும். எனக்கு இசையே மூச்சாகி விட்டது. மூச்சு விடுவது எப்படி இயற்கையாக நடகிறதோ, அதே போல் தான் எனக்கு இசை இயற்கையாக வருகிறது. பாரதியார், ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும், கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று சொன்னார்.
ஆனால், இது தவறு.

Advertisement

இளையராஜா குறித்த தகவல்:

‘ சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலை செல்வங்களை அங்கு கொண்டு சேர்ப்பீர்’ என்று அந்த மாதிரி இந்த நிறுவனம் வரவேண்டும் என்று கூறியிருக்கிறார். இப்படி பாரதியாரின் கவிதைக்கு மறுப்பு தெரிவித்து இளையராஜா கூறி இருப்பது தான் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. இவருடைய இசையை ரசிக்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement