கடல் கன்னி போல கடலுக்கு அடியில் ஸ்கூபா டைவிங் செய்த இலியானா.!

0
846
- Advertisement -

ரவிகிருஷ்ணா நடிப்பில் வெளியான கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை இலியானா டி க்ரூஸ். அதன் பின்னர் தமிழில் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார். திறமை வாய்ந்த நடிகையான இவருக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வாய்ப்புகள் கொட்ட துவங்கியது.

-விளம்பரம்-

அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்து விட்ட இவர் தற்போது தனது பாய் பிரண்டுடன் உலகம் சுற்றி வருகிறார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த தன்னுடைய போட்டோ கிராபர் ஆன்டருவுடன் தற்போது லிவ் இன் டூ கெதரில் இருக்கிறார். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகின்றானர்.

- Advertisement -

கடந்த 2015ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாக செய்திகள் வந்தது. ஆனால், இருவரும் லிவ் இன் டு கெதரில் தான் உள்ளனர் என பின்னர் அறிவிக்கப்பட்டது. தற்போதும் தனது காதலுருடன் தான் இருந்து வருகிறார்.

சமீப காலமாக உடல் எடை கூடி படு குண்டாக இருந்தார் இலியானா. ஆனால், தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்துள்ளார். சமீபத்தில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இலியானா.

-விளம்பரம்-
Advertisement