2024 ஆம் ஆண்டில் ஐஎம்டிபி யில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 10 படங்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விடுதலை 2:
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் விடுதலை 2. முதல் பாகம் வெற்றியடைந்ததை கொடுத்து இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், சேத்தன், கௌதம் மேனன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இந்த படத்துக்கு ஐஎம்டிபியில் 8.9 ரேட்டிங் கிடைத்து இருக்கிறது.

மகாராஜா:
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகி இருந்த ‘மகாராஜா’ படத்தை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், முனிஷ்காந்த், சிங்கம் புலி, சாச்சனா, அனுராக் காஷ்யப், அபிராமி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்துக்கு ஐஎம்டிபியில் 8.5 ரேட்டிங் கிடைத்து இருக்கிறது.

மெய்யழகன்:
தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களாக திகழும் அரவிந்த்சாமி- கார்த்தி நடிப்பில் வெளியாகி இருந்த படம் ‘மெய்யழகன்’. இந்த படத்தை 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்தார். மேலும், இந்த படத்துக்கு ஐஎம்டிபியில் 8.4 ரேட்டிங் கிடைத்து இருக்கிறது.

அமரன்:
ராணுவத்தில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு வெளியாகி இருந்த திரைப்படம் தான் அமரன். இப்படத்தில் முகுந்தாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்தது. மேலும், இந்த படத்துக்கு ஐஎம்டிபியில் 8.3 ரேட்டிங் கிடைத்து இருக்கிறது.

வேட்டையன்:
தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக ஜொலித்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக்பஸ்டர் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருந்த படம் வேட்டையன். இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்க, லைகா நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ரித்திகா சிங், ராணா, துஷாரா விஜயன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்துக்கு ஐஎம்டிபியில் 7.1 ரேட்டிங் கிடைத்து இருக்கிறது.

கருடன்:
தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூரி. இவர் நடிப்பில் வெளியான கருடன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், மைம் கோபி, ஆர் வி உதயகுமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்துக்கு ஐஎம்டிபியில் 7.1 ரேட்டிங் கிடைத்து இருக்கிறது.
லவ்வர்:
தமிழில் ஜெய் பீம், குட் நைட் போன்ற வெற்றி படத்தை தொடர்ந்து மணிகண்டன் நடித்த படம் லவ்வர். அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் மணிகண்டன், கௌரிப்பிரியா, கண்ணா ரவி, நிகிலா ஷங்கர், ஹரிஷ் குமார், ஹரிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு காதல் ஜோடிக்குள் நடக்கும் சிக்கல்கள் குறித்து இந்த படம் உருவாகி இருந்தது. மேலும், இந்த படத்துக்கு ஐஎம்டிபியில் 7.0 ரேட்டிங் கிடைத்து இருக்கிறது.
மெரி கிறிஸ்துமஸ்:
இந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த படங்களில் ஒன்று மெரி கிறிஸ்துமஸ். இந்தப் படத்தில் கத்ரீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்துக்கு ஐஎம்டிபியில் 6.9 ரேட்டிங் கிடைத்து இருக்கிறது.

ப்ளூ ஸ்டார்:
அறிமுக இயக்குனர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ப்ளூ ஸ்டார். இந்த படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் தயாரித்தது. இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள் உட்பட பலர் நடித்திருந்தார்கள். கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசை அமைத்தார். மேலும், இந்த படத்துக்கு ஐஎம்டிபியில் 6.9 ரேட்டிங் கிடைத்து இருக்கிறது.

தங்கலான்:
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் விக்ரம். இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த தங்கலான் படத்தை பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியிருந்தார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்துக்கு ஐஎம்டிபியில் 6.8 ரேட்டிங் கிடைத்து இருக்கிறது.






