ஏ ஆர் ரகுமான் இசைப்பள்ளியில் பாடகர் திருமூர்த்தியை சேர்த்து படிக்க வைப்பதாக கமலஹாசன் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விசுவாசம் படத்தில் இசையமைப்பாளர் டி. இமான் இசையில் சித் ஸ்ரீராம் பாடிய “கண்ணான கண்ணே, கண்ணான கண்ணே” என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இந்த பாடலைப் பாடி சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனவர் மாற்றுத்திறனாளி திருமூர்த்தி. இது அனைவருக்கும் தெரிந்ததே. அதோடு அந்த வீடியோ பதிவு வாய்ப்பும் சில மணி நேரத்திலேயே லட்சக்கணக்கான மக்களை திரும்பிப் பார்க்க வைத்தது.

பார்வையற்ற இளைஞர் திருமூர்த்தி பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி அவருக்கு படத்தில் பாட வாய்ப்பும் கிடைத்தது. இந்த வீடியோவை பார்த்த இசையமைப்பாளர் இமான் அவரை அழைத்து பாராட்டி தன் இசையில் பாட வைப்பதாக சொன்னார். அதேபோல் இயக்குநர் ரத்ன சிவா இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளிவந்து இருந்த படம் “சீறு”. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் ஐசரி பிலிம் தயாரித்து இருந்தது.

Advertisement

திருமூர்த்தி குறித்த தகவல்:

இந்த படம் காதல், ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி இருந்தது. இந்த படத்திற்கு டி.இமான் அவர்கள் இசையமைத்து இருந்தார். இதனால் இந்த படத்தில் திருமூர்த்திக்கு பாடும் வாய்ப்பை வழங்கி இருந்தார். ஆனாலும், அதற்கு பிறகு பெரிய வாய்ப்புகள் திருமூர்த்திக்கு கிடைக்கவில்லை. இந்தநிலையில் ஏ ஆர் ரகுமான் இசைப்பள்ளியில் திருமூர்த்தியை சேர்த்து படிக்க வைப்பதாக கமலஹாசன் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

விக்ரம் படம்:

கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை நடித்து பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது.

Advertisement

கமல் அறிவித்த அறிவிப்பு:

மேலும், இந்த படத்தில் கமலஹாசனே எழுதி பாடிய பத்தல பத்தல பாடல் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த பாடலை ஒரு வாளியில் தாளம் போட்டவாறு திருமூர்த்தி பாடி இணையத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பயங்கர வைரலானது. இதையடுத்து திருமூர்த்தி அழைத்து நடிகர் கமலஹாசன் சந்தித்தார். பின் அவரின் இசை ஆர்வத்தை உணர்ந்த கமலஹாசன் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் இசை பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதாகவும் அதற்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்திருக்கிறார்.

Advertisement

இமானின் பதிவு:

இது சம்பந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த அறிவிப்பு சோசியல் மீடியாவில் வெளியானதை அடுத்து பலரும் நடிகர் கமலுக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து இமான் கூறியிருந்தது, பாடகர் திருமூர்த்தியின் அனைத்து வளர்ச்சிகளிலும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! நீங்கள் மேலும் மேலும் உயரவும்! வலிமைமிக்க சாதனைகளை நோக்கி உங்களின் ஒவ்வொரு சிறு அடியின் போது நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அன்பான ஆதரவிற்கு கமல் சார் அவர்களுக்கு நன்றி! என்று பதிவிட்டிருக்கிறார்.

Advertisement