பங்காளிகளா அடிச்சி தூக்கலாமா.! விஸ்வாசம் பாணியில் வீடியோ பதிவு செய்த சர்வதேச Csk வீரர்.!

0
682
Thala
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தின் வசனங்கள் பெரும் பிரபலமடைந்துள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாட இருக்கும் இம்ரான் தாஹீர் விஸ்வாசம் பட வசனத்தை ட்வீட் செய்துள்ளார்.

-விளம்பரம்-
Image result for imran tahir csk

ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் மூன்று நாட்களே உள்ளது. இந்நிலையில் சென்னை அணியின் புதிய ஆந்தம் பாடல் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்த ஐபிஎல் தொடருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு சென்னை அணிக்கு மட்டும் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வரும் சனிக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் முதல் போட்டி துவங்க உள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை சிலமணி நேரங்களிலேயே விற்று தீர்ந்தது. இந்த நிலையில் சென்னை அணியில் தென்னாபிரிக்க வீரர் இம்ரான் தாஹீர் இடம்பெறுள்ளர்.

இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித் பேசிய பஞ்ச் வசனத்தை குறிப்பிட்டுள்ளார். அதில் “என் இனிய உடன்பிறப்புகளே நலமா. உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் வரும் சகோதரன். அடிச்சு தூக்கலாமா? எடுடா வண்டிய போடுடா விசில்” என்று கூறியுள்ளார். மேலும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இம்ரான் தாஹிரின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

Advertisement