விவேக் இல்லாமல் தொடங்கிய இந்தியன் 2 ஷூட்டிங் – அவருக்கு பதில் நடிக்க வந்த நடிகர். யார் தெரியுமா ?

0
505
indian2
- Advertisement -

இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக் நடித்த கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகர் நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த படம் “இந்தியன்”. இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்து இருந்தார்கள். 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் “இந்தியன் 2” படம் உருவாகி வந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும், இந்த ‘இந்தியன் 2’ படம் அதிகபட்ச செலவில் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். வெற்றிகரமாக படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. அப்போது கமலஹாசன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை நடந்தது.

- Advertisement -

படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து:

இதனால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதே சமயம் நடைபெற்று முடிந்த சட்ட மன்ற தேர்தலில் கமல் பிசியாக இருந்ததால் அவர் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் அநியாயமாக உயிரிழந்து இருந்தார்கள். அதில் 8 பேர் படுகாயமடைந்து இருந்தார்கள்.

இந்தியன் 2 படம் குறித்த தகவல்:

இதனால் படப்பிடிப்பு நின்று விட்டது. இப்படி பல பிரச்சனைகளின் நடுவில் இந்தியன் 2 திரைப்படம் எப்போ தொடங்கப்படும்? என்ற கேள்வி எழுந்தது. சமீபத்தில் சங்கர் அவர்கள் பேட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறி இருந்தார். அதன்படி செப்டம்பர் மாதம் மீண்டும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியன் 2 பட ஷூட்டிங் சென்னையில் நடைபெற இருக்கு என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக் நடித்த கதாபாத்திரத்தில் வேறு ஒரு நடிகர் நடிக்க இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

இந்தியன் 2 படத்தில் விவேக்:

இந்த படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு இருந்தது. அது மட்டுமில்லாமல் முதன்முறையாக கமலஹாசனுடன் விவேக் இணைந்து நடிப்பது குறித்து பதிவு ஒன்றும் போட்டிருந்தார். அந்த சமயத்தில் தான் படப்பிடிப்பு பல காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. பின் விவேக் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் காலமாகி இருந்தார்.

விவேக் நடித்த ரோலில் நடிக்கும் நடிகர்:

இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தில் விவேக் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு வேறொரு நடிகரை நடிக்க வைக்கப் போகிறார்கள் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. தற்போது அதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். அதாவது, ஜோக்கர் திரைப்படத்தின் நாயகன் குரு சோமசுந்தரம் தான் விவேக் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

Advertisement