பிக் பாஸ் மேடையில் இந்தியன் - 2 படத்தை உறுதி செய்த சங்கர் - கமல்

By Tamil Selvam · 30/9/2017
கடந்த 1996-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கிய திரைப்படம் 'இந்தியன்'. இந்தப் படத்தில் கமல்ஹாசன் வயதான தோற்றத்திலும் இளமையான ஒரு வேடத்திலும் நடித்திருப்பார். கமல்ஹாசனின் அட்டகாசமான நடிப்பாலும் விறுவிறுப்பான திரைக்கதையாலும் படம் பட்டிதொட்டி எங்கும் தெறி ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் நடித்ததுக்காக கமல்ஹாசனுக்குத் தேசிய விருதும் கிடைத்தது. இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என்று வெகுநாள்களாகத் தெரிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், அந்தப் படத்துக்குச் சம்பந்தப்பட்ட தரப்பு இதுநாள் வரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. தற்போது, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்தான அறிவிப்பு வந்துள்ளது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சி கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. அதை வார இறுதியில் தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த இயக்குநர் ஷங்கர், 'இந்தியன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவது குறித்து அறிவிப்பை வெளியிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வந்திருக்கின்றன.
Tamil Behind Talkies AMP · Quick view
View full