இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவிருக்கிறார். மற்ற நடிகர்கள் யார் என்பது இன்னும் தகவலைகள் வெளிவராத நிலையில், இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் நெடுமுனி வேணு இணைந்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்து.
இந்நிலையில் இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் ஒரு முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தி நடிகரான அக்ஷய் குமார் தற்போது ஷங்கர் இயக்கிய வரும் "2.0" பிடதிலும்விள்ளாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் வில்லனாக இந்தி நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக அக்சய் குமாரையே நடிக்க வைக்கலாம் என்று ஷங்கர் யோசித்து வருகிறாராம். லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும் “இந்தியன் 2” படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.




