அவ்ளோ பெரிய Legandகிட்ட கேக்குற கேள்வியா இது ? Mic Set ஸ்ரீராம் கேட்ட கேள்வியால் கடுப்பான ரசிகர்கள். வீடியோ இதோ.

0
1855
kamal

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் கமல். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், கதாசிரியர் என்று பன்முக குணம் கொண்ட இவர் தற்போது தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். வருகிற சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட போகும் இவர் கடந்த சில வாரமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதே போல கமல் பங்குபெறும் பொது மேடைகளில் கூட அரசியல் கலந்து தான் பேசி வருகிறார்.

அரசியல் பேச்சிக்கு உதவும் என்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் பணியை கூட ஏற்றுக்கொண்டார் கமல். ஆனால், கமலை இன்னமும் பலர் நடிகராக மட்டும் தான் பார்க்கின்றனர். பிக் பாஸ் 4 சமயத்தில் கமல் பிரச்சாரத்திற்கு சென்ற போது கூட மக்கள் கூட்டத்தில் இவரிடம் பிக் பாஸ் குறித்து ரசிகர்கள் கோசமிட்டனர். இப்படி ஒரு நிலையில் விருது விழாவில் கமலிடம் பிரபல யூடுயூபரான மைக் செட் ஸ்ரீராம் சில்லித்தனமான கேள்வி ஒன்றை கேட்டுள்ளார்.

- Advertisement -

சினிமா, சின்னத்திரைபோல யூடியூப்பிலும் ஒரு தனி ராஜ்ஜியமே நடக்கிறது. கருத்து பேசுவதற்கு சில சேனல்கள், காமெடி பண்ணுவதற்கு சில சேனல்கள், ப்ராங் வீடியோ பண்ணுவதற்கு சில சேனல்கள் எனப் பல சேனல்கள் இளைஞர்கள் மத்தியில் ஃபேமஸாக இருக்கின்றன.30, 40 நபர்கள் எனப் பெரிய அளவில் இயங்கும் சேனல்களுக்கு மத்தியில் சில நபர்களை மட்டும் வைத்துக்கொண்டு சக்ஸஸ்ஃபுல்லாக இயங்கி வந்த “மைக் செட்”சேனலில் பிரபலமானவர் ஸ்ரீராம்.

சமீபத்தில் பிரபல யூடுயூப் நிறுவனமான பிளாக் ஷீப், பல்வேறு யூடுயூப் கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தது. இதில் மைக் செட் ஸ்ரீராமிற்கு, கமலை வைத்து விருதை வழங்கினார்கள். கமலிடம் விருது வாங்கிய ஸ்ரீராம், கமலிடம் கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். அதாவது, எவ்ளோ பிரச்சனை பத்தி பேசுறீங்க இந்த முரட்டு சிங்கிள் பிரச்னை பத்தி பேசுங்க சார் என்று ஸ்ரீராம் கேட்க, அதற்கு கமல் ‘சிங்கிளாக இருக்கிறது பல நேரங்களில் நல்லது ‘ என்று பதில் கூறினார்.

-விளம்பரம்-

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மாபெரும் கலைஞரான கமலிடம் இப்படி ஒரு சில்லித்தனமான கேள்வியை கேட்பதா என்று பலரும் மைக் செட் ஸ்ரீராமை விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கமல் தோலின் மீது கை வைத்து கேள்வியை கேட்பதா என்று பலரும் கூறி வருகின்றனர்.

Advertisement