யானை சாணத்தில் டீ போட்டு கொடுத்தார் – மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியில் பங்கப்பெற்ற பாலிவுட் நடிகர்.

0
870
akshay
- Advertisement -

உலகம் முழுவதும் உள்ள பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வைல்ட். காடுகளில் தனியாக மாட்டிக் கொள்ளும் பட்சத்தில் கையில் கிடைத்த பொருட்களை வைத்தும் காடுகளில் கிடைத்ததை உண்டு எப்படி உயிர் வாழ வேண்டும் என்ற யுத்தியை இந்த நிகழ்ச்சியில் சொல்லி தருகிறார்கள். அதே போல மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி பல்வேறு நாடுகளில் உள்ள காடுகளில் எடுக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவின் முன்னாள் பிரதமரான ஒபாமா கூட கலந்து கொண்டார். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன் கூட இந்திய பிரதமர் மோடி அவர்கள் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மோடியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் பேர் கிரில்ஸ் உடன் இணைந்து மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

- Advertisement -

ரஜினிகாந்தை தொடர்ந்து பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மற்றும் கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோர் தனித்தனியே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகிஇருந்தது. இந்த நிலையில் Into The Wild நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கலந்து கொண்டு இருக்கிறார்.

சமீபத்தில் இவர் பேர் கிரில்ஸ்சுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருந்தது. அந்த ப்ரோமோவில் பேர் கிறில்சுக்கு இணையாக அக்ஷய் குமாரும் ஸ்டண்ட் செய்துள்ளார். மேலும், பேர் கிறில்ஸ் அக்சய் குமாருக்கு யானை சாணத்திலாலான டீ ஒன்றை கொடுத்துள்ளார். அதையும் அக்சய் குமார் குடித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement