IPL 2021 : ஹார்லிக்ஸு பூஸ்டு CSK வேஸ்ட்டு - இந்த ஆண்டும் CSKவை கேலி செய்து வீடியோ வெளியிட்ட RCB ரசிகைகள்.

By Rajkumar · 20/4/2021

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐ பி எல் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பிரச்சனை காரணமாக ஐபிஎல் போட்டி அரபு நாட்டில் நடைபெற்றது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இருப்பினும் இந்தியாவில் இருந்து டிவியில் பார்த்தபடி தங்களுக்கு பிடித்தமான ஆணிக்கு ஆதரவை அளித்தனர். என்னதான் ஐபிஎல்லில் பல அணிகள் இருந்தாலும், சென்னை, மும்பை மற்றும் பெங்களூர் அணிக்கு ஆதரவு அதிகம் தான்.

https://www.youtube.com/watch?v=_gdu9hY8wGw

அதிலும் சென்னை அணி ரசிகர்களுக்கும் பெங்களூர் மும்பை அணி ரசிகர்களுக்கும் 7 ஆம் பொருத்தம் தான். சென்னை அணியை கேலி செய்யும் விதமாக பெங்களூர் அணி ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பல மீம்களையும் வீடியோகளையும் வெளியிட்டனர். அதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று கடந்த ஆண்டு பெங்களூர் அணியை ஆதரித்து சில இளம் பெண்கள் ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இதையும் பாருங்க : Mr&Mrs சின்னத்திரை சீசன் 3 யில் கலந்துகொண்டுள்ள 12 போட்டியாளர்கள். அட இந்த 2 குக்கு வித் கோமாளி பிரபலமும் இருக்காங்களே.

இதை பார்த்த சென்னை ர சிகர்கள் பெங்களூர் அணியை கேலி செய்யும் விதமாக பல வீடியோகளை வெளியிட்டனர். அவ்வளவு ஏன் பரிதாபங்கள் கோபி சுதாகர் கூட பெங்களூர் வைரல் பெண்கள் நடனத்தை கேலி செய்து வெளியிட்டனர். இப்படி ஒரு நிலையில் இந்த ஆண்டும் சென்னை அணியை கேலி செய்து பெங்களூர் ரசிகைகள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

https://www.youtube.com/watch?v=HAJVmiKSdI4

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளிலும் வென்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னை அணி 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வென்று இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

behindtalkies AMP · Quick view
View full