தொலைக்காட்சிகள் அனைத்தும் சீரியலை தாண்டி பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்ட மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் சின்னத்திரை சீசன் 3 விரைவில் துவங்க இருக்கிறது.
கணவன், மனைவி இருவரும் சின்னத்திரை நட்சத்திரங்களாக இருந்தால், அவர்களை வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சி.இது பல சுற்றுகள் கொண்ட போட்டி நிகழ்ச்சி. நட்சத்திர தம்பதிகள் இடையே உள்ள திறமை, ஒற்றுமை, மன உறுதி, பொது அறிவு, ஆகியவற்றை வெளிப்படுத்த பல ரவுண்டுகள் இருக்கும். அதை எல்லாம் தாண்டி இறுதியில் சிறந்த தம்பதியருக்கு டைட்டிலும் வழங்கப்படும்.
இதையும் பாருங்க : விவேக்கின் 1 கோடி கனவில் இணைந்த விவேக்குடன் நடித்த நடிகை – (ஒரே படம் தான் அவர் கூட நடிச்சாரு).
இதுவரை இரண்டு சீசன் நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் சீசன் விரைவில் துவங்க இருக்கிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருந்தது. அதில் அர்ச்சனா தொகுப்பாளினியாக இருப்பதை பார்த்த பலரும் அர்ச்சனாவை இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக போட வேண்டாம் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. இதில் குக்கு வித் கோமாளி சீசன் 2 வில் போட்டியாளராக கலந்து கொண்ட தீபா தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார். அதே போல குக்கு வித் கோமாளியில் கலக்கிய சரத்தும் தனது மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார். மேலும், யோகேஷ் – நந்தினி, மணிகண்டன் – சோபியா, வேல்முருகன் – காலா, யுவராஜ் – காயத்ரி என்று மொத்தம் 12 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.