சோகத்தில் மேல் சோகம். தாய் இறந்த சில நாளில் அவசர சிகிச்சையில் அனுமதிக்க பிரபல நடிகர்.

0
1306
irfan
- Advertisement -

பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்தவர் இர்பான் கான். இவர் திரைப்படம் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொடர் மற்றும் மேடை அரங்கத்திலும் நடித்து உள்ளார். சலாம் பாம்பே என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் கால் பதித்தார். முதல் படத்தில் இவருக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பரிந்துரைக்கப்பட்டது. தொடர்ந்து இவர் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வந்தார். இதனால் இவருக்கு ஹாலிவுட்டிலும், பிரிட்டன் திரைப் படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இவர் நடிப்பில் வெளிவந்த Life of Pi என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த படம் ஆஸ்கர் விருது பட்டியலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Actor Irfan Khan's mother passed away on Saturday - The PrimeTime

இதனை தொடர்ந்து இவர் பிகு, லன்ச் பாக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். நடிகர் இர்பான் கான் அவர்கள் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த பான் சிங் தோமர் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது. அது மட்டுமில்லாமல் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் இவர் தன்னுடைய நடிப்புத் திறமைக்காக வாங்கியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் இர்பான் கான்னின் வாழ்க்கையில் சோகத்தின் மேல் சோகம் நடந்து கொண்டு உள்ளது. நடிகர் இர்பான் கான் அவர்கள் உடல்நலக்குறைவால் தற்போது மும்பையில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு நடிகர் இர்பான் கான் அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது தெரியவந்தது.

பின் இவர் இதற்காக லண்டனில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தான் நடிகர் இர்பான் கான் அவர்களின் தாயார் சாயிதா பேகம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். ஆனால், நடிகர் இர்பான் கான் அவர்கள் லாக்டவுன் சமயத்தில் மும்பையில் மாட்டிக்கொண்டதால் தன்னுடைய தாயின் இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாமல் போனது. இவர் தன்னுடைய வயது மூப்பின் காரணமாக தான் காலமாகியுள்ளார்.

-விளம்பரம்-
Irrfan Khan Admits In ICU After Serious Condition- Mother Died ...

இதனால் உறவினர்கள் செல்போன் மூலமாக இறுதி சடங்குகளை இர்பான் கானுக்கு காட்டினார்கள். அதை பார்த்து இர்பான் கான் கதறி அழுதார். பின்னர் தாய்க்கு இறுதி சடங்கில் மகன் செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் இர்பான் கான் செய்தார். இர்ஃபான் கானின் தாய் சயீதா பேகம் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது இர்பான் கான் உடல் நலம் குறைவு ஏற்பட்டு உள்ளது. மேலும், இவருடைய உடல் நிலை மிகவும் மோசமாகி உள்ளதால் தற்போது மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது இவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் பாலிவுட்டில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் உள்ளார்கள். இர்ஃபான் கான் நடிப்பில் வெளிவந்த அங்க்ரெஸி மீடியம் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ஆனால், சில நாட்களிலேயே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் மிக விரைவிலேயே அப்படம் ஆன்லைனில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement